காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் நடத்தி வரும் தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும்: மெஹ்பூபா முஃப்தி

இந்தியாவுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற வேண்டுமானால் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் நடத்தி வரும் தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும்: மெஹ்பூபா முஃப்தி

ஸ்ரீநகர்

இந்தியாவுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற வேண்டுமானால் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹ்பூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும் போது அதேசமயத்தில் பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கொள்கைகளை கடைபிடித்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்வார் எனற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் கூறினார்.

எல்லையில் அமைதியை உருவாக்க பாகிஸ்தானுக்கு பெரும் பங்கு உள்ளது. போர் குணத்துடன் பயங்கரவாதிகளுக்கு அளித்து வரும் ஆதரவை நிறுத்திக் கொள்ள வேண்டும். எல்லையில் நடக்கும் ஊடுருவல் மறைக்கப்பட வேண்டிய விசயம் அல்ல என்றும் அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com