சீன பட்டாசு விற்றால் உரிமம் ரத்து : மாவட்ட எஸ்பி., எச்சரிக்கை 

திருவள்ளூர் மாவட்டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட சீன பட்டாசுகளை விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என எஸ்பி., சாம்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவள்ளூர், 

திருவள்ளூர் மாவட்டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட சீன பட்டாசுகளை விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என எஸ்பி., சாம்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடு முழுவதும், வரும், 29-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் தீபாவளிக்கு பட்டாசு கடைகள் அமைய உள்ள இடங்களை தீயணைப்பு துறை, மாவட்ட நிர்வாகம், போலீசார் என பல தரப்பில் ஆராயப்பட்டு, பட்டாசு கடைகளுக்கு தற்காலிக உரிமம் வழங்கப்பட்டு வருகிறது.

 இந்த தற்காலிக உரிமம் தீபாவளி பண்டிகை காலத்தில் மட்டுமே செல்லத்தக்கது. பாலித்தீன் பைகளில் பட்டாசு வழங்க கூடாது. பட்டாசு கடை நுழைவு வாயில் கதவுகள் வெளிப்பக்கம் திறக்கும்படி அமைக்க வேண்டும். 

 தீ அபாயத்தின் பாதுகாப்புக்கு, போதுமான தண்ணீர் எப்போதும் வைத்திருக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளையொட்டி கடைகளை வைக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பேராபத்தை விளைவிக்கும் சீன பட்டாசுகளை விற்க கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  

அந்த தடையை மீறி இம்மாவட்டத்தில் சீன பட்டாசுகளை விற்பனை செய்தால் பட்டாசு கடைகள் அமைக்க வழங்கப்பட்டுள்ள உரிமம் ரத்து செய்யப்பட்டு கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com