டொனால்டு டிரம்ப் மீது, ஆபாசப் பட நடிகை ஒருவர் பாலியல் புகார்

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாகப் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் மீது, ஆபாசப் பட நடிகை ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
டொனால்டு டிரம்ப் மீது, ஆபாசப் பட நடிகை ஒருவர் பாலியல் புகார்

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாகப் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் மீது, ஆபாசப் பட நடிகை ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

ஜெஸிகா டிரேக் என்ற ஆபாசப் பட நடிகை இதுபற்றி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன்பாக, நட்சத்திர ஹோட்டலில் நடந்த  நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, சென்றிருந்தேன்.

அங்கு, லிப்டில் சென்றபோது, என்னுடன் டிரம்ப் வந்தார். திடீரென என்னைக் கட்டித் தழுவி, முத்தமும் கொடுத்தார். எனக்கு என்னச் செய்வதென்றே தெரியவில்லை. இதையடுத்து, எனது அறைக்குச் சென்றேன். அங்கே, டிரம்ப் உதவியாளர் என்று கூறி, ஒருவர் தொலைபேசியில் அழைத்தார். 10,000 டாலர்கள் தருவதாகவும், உடனே, டிரம்ப் அறைக்கு வரவேண்டும் என அவர் கூறினார்.

ஆனால், நான் மறுத்துவிட்டேன். சில நிமிடங்களில், டொனால்டு டிரம்ப் நேரில் வந்து, எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்று கூறி, மிகவும் வற்புறுத்தினார். நான் தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கவே, பின்னர் இரவு உணவு மட்டும் சாப்பிட்டுவிட்டுச் செல்லும்படி வற்புறுத்தினார்.

அதற்கு மட்டும் நான் சம்மதம் தெரிவித்தேன். இவ்வாறு ஜெஸிகா டிரேக் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, 10க்கும் அதிகமான பெண்கள், டொனால்டு டிரம்ப் மீது பாலியல் புகார் தெரிவித்து, அதற்கான வீடியோ ஆதாரத்தையும் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், ஆபாசப் பட நடிகையின் புகார், அமெரிக்க அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com