நடிகர் சங்க கணக்குகள் இணையதளத்தில் வெளியிடப்படும்: விஷால் பேட்டி

நடிகர் சங்கத்தின் கணக்குகள் அனைத்தும் நாளை இணையதளத்தில் வெளியிடப்படும் என்று நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால்
நடிகர் சங்க கணக்குகள் இணையதளத்தில் வெளியிடப்படும்: விஷால் பேட்டி

சென்னை: நடிகர் சங்கத்தின் கணக்குகள் அனைத்தும் நாளை இணையதளத்தில் வெளியிடப்படும் என்று நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டுகளைப்போல் இந்த ஆண்டும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கும் விழா நடிகர் சங்கம் வளாகத்தில் நடைபெற்றது.

இதில், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், துணைத் தலைவர் பொன்வண்ணன் மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் தலைவர் நாசர் பேசும்போது, சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் அனைவரும் தீபாவளி கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களிடையே விஷால் கூறுகையில், நடிகர் சங்கத்தில் ஊழல்கள் நடைபெறுவதாக சிலர் வேண்டுமென்றே குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால், நடிகர் சங்கத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை. நடிகர் சங்கத்திற்கு திரட்டப்பட்ட நிதி மூலம் எவ்வளவு கடன் அடைக்கப்பட்டுள்ளது, எவ்வளவு தொகை வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. நடிகர் சங்கத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தியது தொடர்பான அனைத்து விபரங்களும் எங்களிடம் தெளிவாக உள்ளன.

நடிகர் சங்க வரவு, செலவு கணக்குகள் அனைத்தும் நாளை இணையதளத்தில் வெளியிடப்படும். ஜனவரி மாதம் நடிகர் சங்க கட்டிடத்தின் அடிக்கல் நாட்டுவிழா நடைபெறும் என்று தெரிவித்தார்.

தாங்கள் பொறுப்புக்கு வரும் முன்னர் நடிகர் சங்கத்தில் ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது நவடிக்கை எடுக்கப்படும் எனவும், நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் வரும் நவம்பர் 27-ஆம் தேதி நடைபெறும் எனவும் விஷால் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com