நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல்: மூன்று சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலுக்காக மூன்று சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தொகுதி தேர்தல் அலுவலர் வ.மலர்க்கண்ணன் தெரிவித்துள்ளார்.

நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலுக்காக மூன்று சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தொகுதி தேர்தல் அலுவலர் வ.மலர்க்கண்ணன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலுக்காக புதன்கிழமை முதல் நவம்பர் 2ந்தேதி வரை வேட்புமனுக்கல் தாக்கல் செய்யலாம். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு ஒருவரும், அங்கீகரிக்கப்படாத கட்சியினர் மற்றும் சுயேச்சைகளுக்கு 10 பேரும் மனுவை முன்மொழிய வேண்டும். 

வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகத்திற்குள்ளே வேட்பாளருடன் சேர்த்து 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வேட்பு மனு தாக்கல் செய்யும் தட்டாஞ்சாவடி தொழில்துறை அலுவலகம்  முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நெல்லித்தோப்பு பகுதியினை மூன்று பிரிவுகளாக பிரித்து மூன்று தேர்தல் துறை சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
6 பறக்கும் படைகள்
இவர்கள் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் சென்று வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகளை சரிசெய்வது வாக்குசாவடிகளை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளுவார்கள். தேர்தலில் விதிமுறைகள் மீறி முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் இருக்க 6 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார் மலர்க்கண்ணன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com