மாவோயிஸ்ட் தம்பதி மீதான சிம்கார்டு வழக்கு டிசம்பருக்கு ஒத்தி வைப்பு

போலி ஆவணங்கள் மூலமாக சிம்கார்டு வாங்கிய விவகாரம் தொடர்பாக மாவோயிஸ்ட் தம்பதி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு டிசம்பர் 20-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

திருப்பூர், அக். 25:

போலி ஆவணங்கள் மூலமாக சிம்கார்டு வாங்கிய விவகாரம் தொடர்பாக மாவோயிஸ்ட் தம்பதி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு டிசம்பர் 20-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் வைத்து கடந்த ஆண்டு மே மாதம் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த ஆர்.ரூபேஷ், அவரது மனைவி ஆர்.ஷைனா, ஜே.அனூப், சி.கண்ணன், சி.வீரமணி ஆகிய 5 பேர் கியூ பிரிவு போலீஸôரால் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில், ரூபேஷ், ஷைனா இருவரும் திருப்பூரில் தங்கியிருந்த போது, போலி ஆவணங்களை மோசடியாக பயன்படுத்தி சிம்கார்டு வாங்கியதாக புகார்களின் அடிப்படையில் திருப்பூர் மாநகர வடக்கு போலீஸரர் வழக்குப் பதிவு செய்தனர்.

இவ்வழக்கு திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ரூபேஷ், ஷைனா இருவரும் போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு முதன்மை மாவட்ட நீதிபதி அலமேலு நடராஜன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதைத் தொடர்ந்து வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 20-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com