நாய்க்கு சிகிச்சை அளிப்பதில் மத்தியப் படை முன்னாள் காவலருக்கு வெட்டு: மருத்துவர் மீது வழக்கு

நாய்க்கு சிகிக்சை அளிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், மத்தியப் படை முன்னாள் காவலரை கத்தியால்

கடலூர்: நாய்க்கு சிகிக்சை அளிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், மத்தியப் படை முன்னாள் காவலரை கத்தியால்
வெட்டியதாக மருத்துவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
 கடலூர் மாவட்டம், பாதிரிக்குப்பம் குமாரப்பேட்டையைச் சேர்ந்தவர் பா.சண்முகவேல் (44). மத்திய காவல் படையில் (சிஆர்பிஎப்) பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். இவர் வளர்த்து வரும் ஜெர்மன்ஷெப்பர்டு நாய்க்கு உடல் நிலை சரியில்லாததால், சனிக்கிழமை கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள மாவட்ட கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு பணியில் இருந்த மருத்துவர் சி.சங்கரநாராயணன் (47), தற்போது பணி நேரம் முடிந்து விட்டதாகவும், மாலையில் வந்து பார்த்துக்கொள்ளுமாறும் கூறினாராம்.
 ஆனால், நாய்க்கு உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும், எனவே, உடனடியாக சிகிச்சையளிக்க வேண்டும் என்றும் சண்முகவேல் கூறினாராம். இதுதொடர்பாக இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், சங்கரநாராயணன் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்தியால் தாக்கியதில் சண்முகவேல் காயமடைந்தார். இதையடுத்து ஆட்டோ மூலம் சண்முகவேல் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செய்யப்பட்டார்.
 அதே ஆட்டோவில் நாயும் இருந்தது. மருத்துவமனையில் சண்முகவேல் சிகிச்சை பெற்றார். எனினும், உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரது நாய் ஆட்டோவிலேயே இறந்தது.
 இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீஸார் மருத்துவர் சங்கரநாராயணன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com