இந்திய செய்தித்தாள் சங்கத் தலைவராக சோமேஷ் சர்மா தேர்வு

2016-17ம் ஆண்டுக்கான இந்திய செய்தித்தாள் சங்கத் தலைவராக சோமேஷ் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய செய்தித்தாள் சங்கத் தலைவராக சோமேஷ் சர்மா தேர்வு

பெங்களூரு

2016-17ம் ஆண்டுக்கான இந்திய செய்தித்தாள் சங்கத் தலைவராக சோமேஷ் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இப்பதவிக்கான தேர்தல் 77வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தின் போது நடந்தது. இதில் மாத்ருபூமி குழுவைச் சேர்ந்த பி.வீ. சந்திரனை தோற்கடித்து ராஷ்டிரதூத் செய்தி நிறுவனத்தை சேர்ந்த சர்மா வெற்றி பெற்றுள்ளார்.

பிஸ்னஸ் ஸ்டாண்டட் பத்திரிகையின் அகிலா உரன்கார் புதிய துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்து நிறுனத்தின் கே. பாலாஜி இணைத் தலைவராகவும்,

இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்தின் சரத் சக்சேனா கெளரவ பொருளாளராகவும், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். வி. சங்கரன் பொதுச் செயலாளராக தேர்வாகியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com