இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் லாபம் 2016-17 முழு நிதியாண்டில் உயர்ந்துள்ளது

இன்ஃபோசிஸ் அதன், மார்ச் காலாண்டு மற்றும் 2016-17 முழு நிதியாண்டு நிதிநிலை அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் லாபம் 2016-17 முழு நிதியாண்டில் உயர்ந்துள்ளது

இன்ஃபோசிஸ் அதன், மார்ச் காலாண்டு மற்றும் 2016-17 முழு நிதியாண்டு நிதிநிலை அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி 2016-17 முழு நிதியாண்டில் லாபம் மற்றும் வருமானம் உயர்ந்துள்ளதாக இன்ஃபோசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

குறிப்பாக, மார்ச் காலாண்டில் அதன் ஒட்டுமொத்த நிகர லாபம் 0.2% உயர்வுடன், ரூ.3,603 கோடியாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதுவே, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.3,597 கோடியாக இருந்ததாக, இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது.

இதே காலத்தில் வருமானம் 3.4% அதிகரித்து, ரூ.17,120 கோடியாகவும் உள்ளது. எனினும், காலாண்டு முடிவுகள் முதலீட்டாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதால், மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்கு, விலை சரிவுடன் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com