ஐபிஎல் போட்டி: பெங்களூர் அணி முதலில் பேட்டிங்

பெங்களுருவில் நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 12-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் போட்டி: பெங்களூர் அணி முதலில் பேட்டிங்

பெங்களுருவில் நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 12-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளது. பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.  

பெங்களூரு அணியை எதிர்த்து மல்லுகட்ட உள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 2 வெற்றி (கொல்கத்தா, ஐதராபாத்துக்கு எதிராக), ஒரு தோல்வியுடன் (புனேக்கு எதிராக) 4 புள்ளிகளை பெற்றுள்ளது. கடைசி இரு ஆட்டங்களில் வெற்றியை ருசித்த மும்பை அணி ‘ஹாட்ரிக்’ வெற்றிக்கு குறி வைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது வலது தோள்பட்டையில் காயம் அடைந்த இந்திய கேப்டன் விராட் கோலி ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார். காயத்தில் இருந்து மீளாததால் ஐ.பி.எல்.–ல் முதல் 3 ஆட்டங்களில் விளையாடவில்லை.

இந்த நிலையில் காயம் முழுமையாக குணமடைந்து அவர் முழு உடல்தகுதியை எட்டி விட்டதாக இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதையடுத்து விராட் கோலி இந்த சீசனில் முதல் முறையாக இன்று அடியெடுத்து வைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com