வருமானவரித் துறையினர் கொடுத்த புகார்: தமிழக அமைச்சர்கள் 3 பேர் மீது வழக்குப் பதிவு

வருமான வரித்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, காமராஜ்,
வருமானவரித் துறையினர் கொடுத்த புகார்: தமிழக அமைச்சர்கள் 3 பேர் மீது வழக்குப் பதிவு

சென்னை: வருமான வரித்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, காமராஜ், உடுமலை ராதா கிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 7ஆம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை செய்தனர்.

மத்திய போலீஸாரின் பாதுகாப்பையும் மீறி தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், தமிழக அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் விஜயபாஸ்கரின் வீட்டுக்குள் நுழைந்து சோதனைக்கு இடையூறு செய்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஆணையர் அலுவலகத்தில் வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு புகார் அளித்தது. இந்த புகாரின் அடிப்படையில் புகாருக்கு உள்ளான அமைச்சர்களை விசாரணை நடத்த சென்னை காவல்துறை ஆணையர் கரண் சின்ஹா உத்தரவிட்டுள்ளார்.

சென்னை தெற்கு காவல்துறை ஆணையர் சங்கர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்தார். விசாரணை நடத்திய பின்னர் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் கரண்சின்ஹா ஆணையிட்டார்.

இதையடுத்து சென்னை அபிராமபுரம் காவல்நிலையத்தில் அமைச்சர்கள் மூன்று பேர் மற்றும் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் மீதும்  சட்டப்பிரிவு 183, 186, 189, 448 கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆதாரங்களை அழிப்பு, அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுப்பு ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவையானால் அமைச்சர்கள் 3 போரையும் கைது செய்து விசாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com