இந்தியா உட்பட 80 நாடுகளுக்கு விசா அனுமதி தேவையில்லை:  கத்தார் அறிவிப்பு

இந்தியா உட்பட 80 நாடுகளுக்கு விசா அனுமதி தேவையில்லை என கத்தார் அறிவித்துள்ளது.
இந்தியா உட்பட 80 நாடுகளுக்கு விசா அனுமதி தேவையில்லை:  கத்தார் அறிவிப்பு

இந்தியா உட்பட 80 நாடுகளுக்கு விசா அனுமதி தேவையில்லை என கத்தார் அறிவித்துள்ளது.

குறிப்பாக இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளும் இதில் அடங்கும். கத்தார் செல்ல விரும்பும் குறிப்பிட்ட 80 நாடுகளின் குடிமக்கள் விசாவிற்கு விண்ணப்பிக்கவோ அல்லது பணம் செலுத்தவோ தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் இதுகுறித்து கத்தார் சுற்றுலாத்துறை சேர்மன் ஹாசன் அல் இப்ராஹிம் கூறுகையில் கத்தாருக்கு வருகையின் போது 80 தேசத்தை சேர்ந்த பயணிகள் இலவச விசாவிற்கு தகுதிபெறுகிறார்கள்.

இப்பிராந்தியத்தில் கத்தார் இப்போது மிகவும் திறந்தவெளி தேசமாகி உள்ளது. எங்களுடைய புகழ்பெற்ற விருந்தோம்பல், கலாச்சார பாரம்பரியம் மற்றும் இயற்கை பொக்கிஷங்களை பார்க்க வரும் பயணிகளை நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்,” என கூறிஉள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com