லட்சுமிபுரம் மக்களின் கிணறு பிரச்னை முடிவுக்கு வந்தது: போராட்டம் வாபஸ்

நீண்ட நாட்களாக நீடித்து வந்த தேனி லட்சுமிபுரம் மக்களின் கிணறு பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.
லட்சுமிபுரம் மக்களின் கிணறு பிரச்னை முடிவுக்கு வந்தது: போராட்டம் வாபஸ்

தேனி:  நீண்ட நாட்களாக நீடித்து வந்த தேனி லட்சுமிபுரம் மக்களின் கிணறு பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. கிணற்றுடன் 18 சென்ட் நிலத்தையும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தரப்பினர் ஒப்படைத்தனர்.

லட்சுமிபுரத்தில் ஓ.பி.எஸ்.சுக்கு சொந்தமான கிணற்றுப் பிரச்சனையில் சமூக தீர்வு எட்டப்பட்டுள்ளது. லட்சுமிபுரம் குடிநீர் பிரச்சனைக்கு காரணமான கிணறு மற்றும் 18 சென்ட் நிலத்தை ஒப்படைப்பதற்கான ஒப்பந்தத்தில் கிராம கமிட்டியிடம் ஓ. பன்னீர் செல்வம் தரப்பினர் கையெழுத்திட்டனர். 

கிணறு ஒப்படைக்க ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து லட்சுமிபுரம் மக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். மேலும், போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி எனவும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com