இன்ஃபோசிஸ் நிறுவன புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சலில் எஸ்.பரேக் நியமனம்

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி மற்றும் மேலாண் இயக்குநராக சலில் எஸ் பரேக் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்ஃபோசிஸ் நிறுவன புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சலில் எஸ்.பரேக் நியமனம்

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி மற்றும் மேலாண் இயக்குநராக சலில் எஸ் பரேக் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப மென்பொருள் ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த விஷால் சிக்கா கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தனது பதவியை ராஜிநாமா செய்தார். அதனை தொடர்ந்து அவரது ராஜிநாமா ஏற்கப்பட்டு தற்காலிகமாக தலைமை செயல் அதிகாரியாக யூ.பி.பிரவீன் ராவ் நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சாலில் எஸ் பாரேக்  நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் வரும் புத்தாண்டு 2018 ஜனவரி 2-ஆம் தேதி பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் 5 ஆண்டுகள் பதவி வகிப்பார் என்று கூறப்படுகிறது. 

பரேக் நியமனம் குறித்து கருத்துத் தெரிவித்த நிலக்கனி, "இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் எம்.டி. பரேக், தகவல் தொழில்நுட்ப  துறையில் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள் உடைய உலக அனுபவத்தை பெற்றுள்ளார். அவர் வணிக முறைகளை செயல்படுத்துவதில் மற்றும் கையகப்படுத்துதல்களை வெற்றிகரமாக நிர்வகிப்பதில் ஒரு வலுவான வரலாற்று சாதனை படைத்துள்ளார். இன்ஃபோசிஸ் தொழிற்துறையில் மாற்றம் வரும் நேரத்திலேயேயும் இவரே தலைமை தாங்குவார் என்று வாரியம் நம்புவதாக தெரிவித்தார். 

சலில் எஸ்.பரேக் கர்னல் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலை பொறியியல் படிப்பையும்,  இயந்திர பொறியியல் படிப்பை முடித்துள்ளார். மும்பை ஐஐடியில் ஏரோ நாட்டிகல் பொறியியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். 

பரேக் 2000-ஆம் ஆண்டு காப்ஜெமினி நிறுவனத்தில் சேர்ந்தார், ஏர்ன்ஸ்ட் மற்றும் யங் பற்றிய ஆலோசனை பிரிவின் குழுவில் பல்வேறு தலைமைத்துவ பதவிகளை வகித்தவர்.

தகவல் தொழில்நுட்ப துறையில் உலகளாவிய அளவில் 30 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர் பரேக் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com