ஜெயலலிதாவுடன் இறுதிவரை சசிகலா மட்டுமே இருந்தார் - மருத்துவர் பாலாஜி

வேட்புமனுவில் கைரேகை வைத்தபோது ஜெயலலிதா சுயநினைவோடு இருந்தார் என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் டாக்டர் பாலாஜி சாட்சியம் அளித்துள்ளார்.
ஜெயலலிதாவுடன் இறுதிவரை சசிகலா மட்டுமே இருந்தார் - மருத்துவர் பாலாஜி

வேட்புமனுவில் கைரேகை வைத்தபோது ஜெயலலிதா சுயநினைவோடு இருந்தார் என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் டாக்டர் பாலாஜி சாட்சியம் அளித்துள்ளார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் டாக்டர் பாலாஜி இன்று சாட்சியம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: - 

கைரேகை பெறும்போது ஜெயலலிதாவை சந்தித்தேன், சிகிச்சை அளிக்கவில்லை. எய்ம்ஸ் மருத்துவர்களும், லண்டன் மருத்துவர்களும் தான் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தார்கள். பெங்களூரு, ஹைதராபாத்திலிருந்தும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் வந்தனர். 

சிகிச்சைக்காக லண்டன் செல்ல வேண்டும் என்ற அறிவுறுத்தலை ஜெயலலிதா ஏற்கவில்லை. ஜெயலலிதாவுடன், இறுதிவரை சசிகலா மட்டுமே இருந்தார். என்று குறிப்பிடார். மேலும் ஆணையத் தலைவர் ஆறுமுகசாமியின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளேன், சம்பந்தப்பட்ட ஆதாரங்களும் வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக டிச.27-ம் தேதி மீண்டும் விசாரணை ஆணையம் முன்பு ஆஜராக உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com