சட்டப்பேரவை வளாகத்திற்குள் மதுக்கடை அமைக்க வேண்டும்: ஜார்கண்ட் எம்.எல்.ஏக்கள் கோரிக்கை

சட்டப்பேரவை வளாகத்திற்குள் மதுக்கடை அமைக்க வேண்டும் என எம்.எல்.ஏக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். 
சட்டப்பேரவை வளாகத்திற்குள் மதுக்கடை அமைக்க வேண்டும்: ஜார்கண்ட் எம்.எல்.ஏக்கள் கோரிக்கை

ராஞ்சி: சட்டப்பேரவை வளாகத்திற்குள் மதுக்கடை அமைக்க வேண்டும் என எம்.எல்.ஏக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். 

ஜார்கண்ட்டில் பாஜகவைச் சேர்ந்த ரகுபர் தாஸ் முதல்வராக இருந்து வருகிறார். பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் மதுவிலக்கு கொள்கையால் ஈர்க்கப்பட்ட ஜார்கண்ட் அரசு, மாநிலத்தில் மதுவிலக்கை அமல் படுத்தும் வகையில் சமீபத்தில் மாநிலத்தில் உள்ள மது கடைகளுக்கான உரிமங்களை ரத்து செய்தது. பின்னர் பொது ஏலம் மூலம் அனுமதிக்கப்பட்ட நகரங்கள் மற்றும் நகரங்களின் புறநகர் பகுதியில் உள்ள மது கடைகளில் மட்டும் இரவு 10 மணி வரை மட்டுமே மது பானங்களை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு பொதுமக்களின் சேவர்களான எம்.எல்.ஏக்கள் மாநில அரசு கடைகள் ஒரு சில இடங்களில் மட்டுமே இருப்பதால் மது வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும். தேவையற்ற பிரச்னைகளும் கைகலப்புகளும், சச்சரவுகளும் உருவாகும் என எதிர்ப்பு தெரிவித்திருப்பதுடன் தற்போது குளிர் காலம் துவங்க இருப்பதால் நீண்ட வரிசைகள் காணப்படும்.

இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் பேரவை வளாகத்திற்குள் மதுபான கடையை திறக்க வேண்டும். பேரவையின் குளிர்கால கூட்டம் தொடர் டிசம்பர் 12-ஆம் தேதி தொடங்குகிறது. அப்போது தங்களின் இந்த விருப்பத்தையும் தேவையையும் குறித்து முதல்வர் ரகுபர் தாஸின் கவனத்து கொண்டு செல்லுமாறு சபாநாயகர் தினேஷ் ஓரானை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். 

மேலும் அரசு சாரா கடைகள் மூலம் மக்களுக்கு மது விற்பனை செய்யும் அரசு, தஙகளது கோரிக்கைகளை ஏற்று பேரவை வளாகத்திற்குள்ளேயே விற்பனை செய்வதில் என்ன தயக்கம்? என்று கேள்வி எழுப்பி உள்ளனர். 

ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களின் இந்த கோரிக்கைக்கு முக்கிய எதிர்கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆதரவளித்துள்ளதுடன் இதுகுறித்து பேரவையில் விவாதம் எழுப்பப்பட்டால் அது நன்றாக இருக்கும் என்று ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com