ராமர் பாலம் இயற்கையாக உருவானதா? மனிதர்களால் கட்டப்பட்டதா?: அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தகவல்!

ராமர் சேது பாலம் மனிதர்களால் கட்டப்பட்டதுதான் என்று அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ராமர் பாலம் இயற்கையாக உருவானதா? மனிதர்களால் கட்டப்பட்டதா?: அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தகவல்!

ராமர் சேது பாலம் மனிதர்களால் கட்டப்பட்டதுதான் என்று அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராமேசுவரம் அருகே உள்ள பாம்பனில் இருந்து இலங்கையில் உள்ள தலைமன்னார்வரை கடலுக்கு அடியில் 50 கி.மீ. தூரத்துக்கு ராமர் பாலம் அமைந்துள்ளது. ராமாயண காலத்தில், இலங்கையில் ராவணனால் சிறைப்பிடிக்கப்பட்ட சீதையை மீட்க கடலை கடந்து செல்வதற்காக ராமபிரான் வானரப்படையின் உதவியுடன் பாலம் கட்டியதாக புராணத்தின்படி கூறப்படுகிறது. ராமரின் வழிகாட்டுதலின் கீழ் கட்டப்பட்டதாக கூறுகிறது. இந்துக்கள் புனிதாமாக கருதுகிறார்கள். பாலம் தற்போது பாம்பன் தீவை மன்னார் தீவுக்கு (மனிதனால் உருவாக்கப்பட்ட) இணைக்கிறது. 

கடந்த 2005-ஆம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையிலான கடல் பகுதியை சரக்கு கப்பல் போக்குவரத்துக்காக சேது சமுத்திர திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், அத்திட்டத்தின் வழித்தடம், ராமர் பாலத்தை சேதப்படுத்தும் வகையில் இருந்ததால், அதற்கு எதிர்ப்பு எழுந்தது. 

இதையடுத்து சேது சமுத்திர திட்டத்தை, ராமர் பாலத்தை இடிக்காமல் மாற்றுப் பாதையில் செயல்பட உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இம்மாத இறுதியில் மத்திய அரசு தனது பிரமாண மனுவை தாக்கல் செய்ய உள்ளது.

இந்நிலையில், ராமர் பாலம் கட்டுக்கதை அல்ல, அது மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூறியுள்ளதாக டிஸ்கவரி கம்யூனிகேஷன் நிறுவனத்துக்கு சொந்தமான அமெரிக்க அறிவியல் சேனலில் "பூமியில் பாலங்கள்" நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பாகி உள்ளது. காலை 7.30 மணிக்கு ஒளிப்பரபப்படும் இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பப்டும் போது அமெரிக்க புவியியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் குறித்த நிறைய தகவல்கள் வெளியாகும். இன்றைய நிகழ்ச்சிக்கான முன்னோட்டம் நேற்று ஒளிப்பரப்பானது. அதில், ராமர் சேது பாலம் குறித்து கூற்றுக்கள் ஒரு இயற்கை உருவாக்கம் அல்ல, ஆனால் மனிதனால் உருவாக்கப்பட்டது என்றும் ராமர் பாலம் கட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட கற்கள் 7 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில், இந்தியானா பல்கலைக்கழகம், தெற்கு ஓரிகன் பல்கலைக்கழகம், கொலராடோ பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதை கண்டறிந்துள்ளனர்.

இந்நிலையில், ராமேசுவரம் அருகில் உள்ள பாம்பன் தீவிலிருந்து இலங்கையின் மன்னார்தீவு வரை கடலடியில் சுண்ணாம்புப் பாறைகளின் தொடர்ச்சி காணப்படுகிறது. இவை ராமர் பாலம் என்றும், ஆதம் பாலம் என்றும் குறிப்பிடப்படுகின்றன. இவை இயற்கையாக உருவானதா மனிதர்களால் கட்டப்பட்டதா என்பது குறித்து, விரைவில் இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சில் ஆய்வு நடத்த உள்ளது. முதல் கட்டமாக வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆய்வு நடத்தப்பட உள்ளதாக இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சில் தலைவர் சுதர்சன் ராவ் தெரிவித்துள்ளார். 

முதல்கட்ட ஆய்வின் அடிப்படையில் கடலடியில் விரிவான அகழாய்வு நடத்தப்பட வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளதாகவும், இந்த ஆய்வுக்காக கடலடி அகழாய்வு குறித்து 15 முதல் 20 ஆய்வாளர்கள் வரும் மே அல்லது ஜூன் மாதத்தில் பயிற்சி தொடங்க உள்ளனர். பயிற்சியைத் தொடர்ந்து, ராமர்பாலம் குறித்த ஆய்வை இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சில் மேற்கொள்ள உள்ளது என தெரிவித்துள்ளார்.

சேது சமுத்திரத் திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்த நிலையில், அதுதொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அமெரிக்க அறிவியல் சேனலில் ஒளிப்பரப்பான தகவல் பரபபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராமர் பாலம் பகுதியில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள மணல் திட்டுகள் வேண்டுமானால், இயற்கையாக உருவானவையாக இருக்கலாம். ஆனால் அங்குள்ள சுண்ணாம்புக்கல் பாறைகள், மனிதர்களால் உருவாக்கப்பட்டவைதான். அவை 7 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என தெற்கு ஓரிகன் பல்கலைக்கழக வரலாற்று அகழ்வாராய்ச்சியாளர் செல்சியா ரோஸ் தெரிவித்துள்ளார். மேலும் ராமர் பாலம் அமைந்துள்ள இடத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆய்வுகளை வைத்து அவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர் என கூறியுள்ளார்.

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி, இந்த கண்டுபிடிப்பை வரவேற்றுள்ளார். ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று தலைப்பிட்டு, அந்த முன்னோட்டத்தை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். 

ராமர் பாலம் விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தாமல் இருப்பதாக பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியசாமி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். இதையடுத்து, ராமர் பால விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை 6 வாரங்களில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்படத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com