வாஷிங்டனில் ரயில் தடம் புரண்டு விபத்து: 3 பேர் பலி

வாஷிங்டனில் ரயில் தடம் புரண்டு விபத்து: 3 பேர் பலி

அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்தில் ரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானதில் குறைந்தது 3 பேர் பலியாகியிருக்கலாம் என

வாஷிங்டன்: அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்தில் ரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானதில் குறைந்தது 3 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

அமெரிக்காவின் வாஷிங்டன் மாணத்தில் உள்ள டாகோமா பகுதியில் இருந்து ஒலிம்பியா சென்று கொண்டிருந்த அம்டிராக் பயணிகள் ரயில் நகரின் நெடுஞ்சாலை பாலத்தை கடக்கும் போது தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இதில், ரயில் ஒரு பெட்டி பாலத்திற்கும் ரோட்டற்கும் இடையே அந்தரத்தில் தொங்குகிறது. இதில், 2 லாரிகள் மற்றும் பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். குறைந்தபட்சம் 3 பேராவது பலியாகியிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. ரயிலில்  ரயில்வே ஊழியர்கள் உள்பட 78 பயணிகள் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அப்பகுதியில் மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளை செய்து வருகின்றனர். 

சரக்கு ரயில் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த வழியே முதன்முறையாக பயணிகள் ரயில் சேவை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

முழுமையான விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாக வில்லை.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com