நம்பிக்கை இல்லாதவர்கள் நக்சல்களாக மாறினால் சுட்டுக்கொல்வோம்: மருத்துவர்களுக்கு மிரட்டல் விடுத்த மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர்

ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் நக்சல்களாக மாறினால் சுட்டுக்கொல்வோம் என்று அரசு விழாவில் மூத்த மருத்துவர்கள் இல்லையென்ற
நம்பிக்கை இல்லாதவர்கள் நக்சல்களாக மாறினால் சுட்டுக்கொல்வோம்: மருத்துவர்களுக்கு மிரட்டல் விடுத்த மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர்

மும்பை: ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் நக்சல்களாக மாறினால் சுட்டுக்கொல்வோம் என்று அரசு விழாவில் மூத்த மருத்துவர்கள் இல்லையென்ற கோபத்தை மத்திய இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிரின் மிரட்டலான பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மராட்டியம் மாநிலம் சந்த்ராபூர் மக்களவை தொகுதி உறுப்பினரான மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர், நேற்று திங்கள்கிழமை (டிச.25) சந்த்ராபூர் அரசு மருத்துவமனையில் 24 மணிநேரமும் இயங்கும் மருந்தகத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்த நிகழச்சியில் மேயர், துணை மேயர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்றனர். ஆனால், மருத்துவமனையில் பணியாற்றும் மூத்த மருத்துவர்கள் யாரும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இந்த கோபத்தை மனதில் வைத்து பேசிய அமைச்சர், “இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க எது மருத்துவர்களை தடுத்து நிறுத்தியது?, என்ற கேள்வி எழுப்பியவர் நக்சல்களுக்கு என்ன வேண்டும்?, அவர்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. அதனால், இவர்களுக்கும் (மருத்துவர்களுக்கும்) ஜனநாயகம் தேவையில்லை. அப்படியானால், நீங்கள் ஏன் இங்கு இருக்கிறீர்கள்? நக்சல் இயக்கத்தில் இணையலாம்” என்று கோபத்தை வெளிப்படுத்தி பேசினார். 

மேலும், “ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத அவர்கள், நக்சல் இயக்கத்தில் இணைந்துகொள்ளலாம், துப்பாக்கிகளை கொண்டு அவர்களுக்கு பதில் சொல்வோம்” என்றும் அவர் மிரட்டல் விடுக்கும் விதமாக பேசினார். 

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த நாளன்று நடைபெற்ற "நல்ல ஆட்சி தினம்" விழாவில் மாவட்ட சிவில் சர்ஜன், உதய் நடாவ், மருத்துவ கல்லூரியின் டீன் மற்றும் இதர நிர்வாகிகள் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மராட்டியம் மாநிலத்தின் சந்த்ராபூர் மாவட்டம் உள்பட அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நக்சல்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com