குஜராத் பாஜகவை உடைக்கிறார் ஹார்திக் படேல்: துணை முதல்வர் நிதின் பட்டேலுக்கு அழைப்பு

மதிக்காத பாஜகவை விட்டு வெளியே வாருங்கள் என்று நிதின் பட்டேலுக்கு ஹார்திக் படேல் அறிவுரை கூறியுள்ளார். 
குஜராத் பாஜகவை உடைக்கிறார் ஹார்திக் படேல்: துணை முதல்வர் நிதின் பட்டேலுக்கு அழைப்பு

மும்பை: மதிக்காத பாஜகவை விட்டு வெளியே வாருங்கள் என்று நிதின் பட்டேலுக்கு ஹார்திக் படேல் அறிவுரை கூறியுள்ளார். 

சமீபத்தில் 182 தொகுதிகள் கொண்ட குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் 99 இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் கடந்த 22-ஆம் தேதி நடந்தது. இதில் முதல்வராக விஜய் ரூபானியும், துணை முதல்வராக நிதின் பட்டேலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதையடுத்து மாநில ஆளுநர் ஓ.பி.கோலியை சந்தித்த பாஜக தலைவர்கள், மாநிலத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினர். அதை ஏற்று, புதிய அரசு  அமைக்குமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். அதன்படி குஜராத்தில் புதிய அரசு பதவி ஏற்றது.

இந்நிலையில், கடந்த ஆட்சியில் தன்னிடம் இருந்த நிதித்துறை தற்போது பறிக்கப்பட்டதால் துணை முதல்வர் பதவி தனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்பதால் நிதின் பட்டேல் ராஜிநாமா செய்யப்போவதாக தகவல்கள் வெளியானது.

நேற்று வெள்ளிக்கிழமை நடந்த அமைச்சரவை பொறுப்பேற்பு நிகழ்சியில் நிதின் பட்டேல் புறக்கணித்தார். தன்னிடமிருந்த நிதித்துறையை பறிக்கப்பட்டதை அவமானமாக கருதியே பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் தனக்கு அளிக்கப்பட்ட அரசு வாகனம் மற்றும் பாதுகாவலர்களையும் நிதின் பட்டேல் ஏற்க மறுத்துள்ளார்.

இந்நிலையில், பாஜக மதிக்கவில்லை என்றால் துணை முதல்வர் நிதின் பட்டேல் கட்சியை விட்டு வெளியே வர வேண்டும். நிதின் பட்டேலுடன் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 10 பேர் வெளியே வருவார்கள் என கூறப்படுகிறது. அவ்வாறு வாருவதற்கு தயாராக உள்ளார்கள் என்றால், காங்கிரஸ் கட்சியில் அவருக்கு பொருத்தமான பதவியை அளிக்க காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன் என்று ஹார்திக் படேல் கூறியுள்ளார்

புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுள்ள முதல் நாளிலேயே குஜராத் அரசில் புதிய விரிசல் ஏற்படத் தொடங்கி உள்ள நிலையில், குஜராத் பாஜக அரசியலில் இருந்து நிதின் பட்டேல் பதவி விலகக்கூடும் என்றே பரவலாக பேசப்படுகிறது. 

கடந்த முறை 61 தொகுதிகளில் வென்றிருந்த காங்கிரஸ் கட்சி இம்முறை 77 தொகுதிகள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com