ஈஷா நிகழ்ச்சியில் பங்கேற்பது பிரதமரின் தனிப்பட்ட விருப்பம்: எச்.ராஜா

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பது பிரதமர் நரேந்திர மோடியின்
ஈஷா நிகழ்ச்சியில் பங்கேற்பது பிரதமரின் தனிப்பட்ட விருப்பம்: எச்.ராஜா

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பது பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட விருப்பம் என பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:  தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக நிபுணர்கள் உதவியுடன் விவசாயிகளின் சந்தேகங்களைப் போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். 

 தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி சுயமாகச் சிந்தித்து செயல்பட வேண்டும். தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகள் நடத்தும் குடும்ப ஆட்சி ஜனநாயகத்துக்கு எதிரானதாகும்.

 கோவையிலுள்ள ஈஷா யோக மையத்தில் ஆதியோகி சிலையை பிரதமர் மோடி திறந்து வைப்பதை இந்து விரோத சக்திகள் எதிர்த்து வருகின்றன. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பது அவரின் தனிப்பட்ட விருப்பம். அதை யாரும் எதிர்க்க முடியாது. கோவையில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழக நிர்வாகம்தான் இந்நிகழ்ச்சிக்கு எதிரான கருத்துகளைப் பரப்பி வருகிறது. அவதூறு பரப்பி வரும் அந்த நிறுவனம்தான் வனப்பகுதியில் ஆறுகளைத் தடுத்து கட்டடங்களைக் கட்டியுள்ளது.

அதன் காரணமாக மலைவாழ் மக்களின் விவசாயம், பாரம்பரிய வழிபாட்டு உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்நிறுவனத்தின் மீது பாஜக சட்டப்படி வழக்குத் தொடரும். அத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈஷா யோக மையம் ஈடுபடவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com