எம்.எல்.ஏ.க்களைத் திரும்பப் பெறும் சட்டம் தேவை: ராமதாஸ்

சட்டப்பேரவை உறுப்பினர்களைத் திரும்பப் பெறும் சட்டம் வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
எம்.எல்.ஏ.க்களைத் திரும்பப் பெறும் சட்டம் தேவை: ராமதாஸ்

சட்டப்பேரவை உறுப்பினர்களைத் திரும்பப் பெறும் சட்டம் வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நடத்திய ஜனநாயகப் படுகொலைகள் கண்டிக்கத்தக்கவை.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் அணி மாறி விடுவார்களோ என்ற அச்சத்தில் 11 நாள்கள் கூவத்தூரில் தனியார் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அங்கிருந்து அவர்கள் அமைச்சர்களின் காரில் அடைத்து சட்டப்பேரவைக்கு அழைத்து வரப்பட்டு வாக்களிக்கச் செய்யப்பட்டனர். பொதுமக்களின் மனநிலை மற்றும் எதிர்பார்ப்புக்கு மாறாக நடந்து கொண்டதால் அவர்களால் தொகுதிகளுக்குள் நுழைய முடியாத நிலை நிலவுகிறது.  

மற்றொரு புறம், மக்களின் பிரச்னைகளுக்காக சட்டப்பேரவையில் குரல் கொடுக்க வேண்டிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அவையில் நடந்து கொண்ட விதம் முகம் சுழிக்க வைக்கிறது. 

வாக்களித்து தேர்ந்தெடுத்தவர்களை அடுத்த 5 ஆண்டுகளுக்கு மாற்ற முடியாது என்பதால், பிடிக்காவிட்டாலும் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. மக்கள் பிரதிநிதிகளை மாற்றும் வசதி இருக்கக்கூடாதா? என அவர்கள் ஏங்குகின்றனர். 

பிலிப்பின்ஸ், வெனிசூலா உள்ளிட்ட சில நாடுகளிலும், அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளின் சில மாநிலங்களிலும் மக்கள் பிரதிநிதிகளை திரும்பப்பெறும் முறை செயல்பாட்டில் உள்ளது.

இந்தியாவில் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், பிகார் ஆகிய மாநிலங்களில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளை திரும்ப அழைத்துக் கொள்ளும் சட்டம் நடைமுறையில் உள்ளது.

எனவே, சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களைத் திரும்பப் பெறும் சட்டத்திருத்தம் தேவைப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com