தமிழகம் முழுவதும் நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடல்

தமிழகம் முழுவதும் நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மற்றும் 169 மதுக்கூடங்கள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை மண்டலத்தில் 105 கடைகளும், 63 பார்களும் மூடப்பட உள்ளன.
தமிழகம் முழுவதும் நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடல்

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மற்றும் 169 மதுக்கூடங்கள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை மண்டலத்தில் 105 கடைகளும், 63 பார்களும் மூடப்பட உள்ளன.

கடந்த 18ம் தேதி சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றது. இதையடுத்து 20 ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி முறைப்படி முதல்வர் பொறுப்பை ஏற்றார்.

அப்போது, ஏற்கனவே 500 கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் மேலும் 500 கடைகள் மூடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதற்கான கோப்பிலும் கையெழுத்திட்டார்.

அதன்படி சென்னை மண்டலத்தில் 105 கடைகளும், 63 பார்களும் மூடப்பட உள்ளன. கோவை மண்டலத்தில் 44 டாஸ்மாக் கடைகளும், 20 பார்களும் மூடப்படுகின்றன. அதேபோல் சேலம் மண்டலத்தில் 133 கடைகளும், திருச்சியில் 119 கடைகளும், மதுரை மண்டலத்தில் 99 டாஸ்மாக் கடைகள், 37 பார்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com