அரசியல் கிசு கிசு:  தீபாவை தீவிர அரசியலுக்கு அழைக்கும் தி.மு.க. முக்கியஸ்தர்கள்..?

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் தமிழக அரசியலில் என்ன மாற்றம் வரும் என்றே அனைவரும் உற்றுநோக்கி
அரசியல் கிசு கிசு:  தீபாவை தீவிர அரசியலுக்கு அழைக்கும் தி.மு.க. முக்கியஸ்தர்கள்..?

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் தமிழக அரசியலில் என்ன மாற்றம் வரும் என்றே அனைவரும் உற்றுநோக்கி வருகின்றனர். குறிப்பாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் முடிவு குறித்தும் அவரது அரசியல் பிரவேசம் குறித்தும் தீவிர எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க., தொண்டர்கள், சென்னை, தி.நகரில் உள்ள தீபாவின் இல்லம் நோக்கிச் சென்று, அவரை தீவிர அரசியலில் ஈடுடவேண்டும் என, கோரிக்கை வைக்கின்றனர். அவர்களிடம் நம்பிக்கையான வார்த்தைகளை, ஜெயலலிதாவை விட மென்மையாகவும்; பொறுமையாகவும் கூறி வருகிறார் தீபா.

இந்நிலையில், தி.மு.க.,வில்  செயல் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு எதிராக சிலர் கிளம்பியுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்டாலினுக்கு பிடிக்காத; ஸ்டாலினை பிடிக்காத தொண்டர்கள், சிலர் அக்கட்சியில் இருந்து வெளியேற முடிவெடுத்துள்ளனர்.

அவர்களும் தி.மு.க.,வைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலரும், தீபாவை ஆதரிக்க முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.   இதைத் தடுக்க, தி.மு.க.,வும் முயற்சிப்பதாகவும் சொல்லப்படுகிறது.  மொத்தத்தில், தமிழக அரசியல், கடும் பரபரப்புடன் நகர்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com