ஒரே இரவில் 23 பேருந்துகளின் கண்ணாடியை உடைத்த   வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு

திருவள்ளூர் -பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலைகளில் ஒரே இரவில் அரசு மற்றும் தனியாரின்

திருவள்ளூர் -பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலைகளில் ஒரே இரவில் அரசு மற்றும் தனியாரின் 23 பேருந்துகளின் கண்ணாடியை உடைத்த நபரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி உத்தரவிட்டார்.

 திருவள்ளூர் ஜே.என்.சாலை, ஸ்ரீபெரும்புதுôர், பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் சென்றுக் கொண்டிருந்த 23 பேருந்துகளின் கண்ணாடியை மர்ம நபர் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்வீசி தாக்கி உடைத்தார். 

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த திருவள்ளூர் டவுன், மணவாளநகர், செவ்வாப்பேட்டை ஆகிய பகுதி போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் திருவள்ளூர் லட்சுமி புரத்தைச் சேர்ந்த விக்னேஷ் (21) என்ற நபரை டவுன் போலீஸôர், இந்த வழக்கில் கைது செய்தனர்.  இதையடுத்து, அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, மாவட்ட எஸ்பி சாம்சன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி விக்னேஷை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து உத்தரவின் நகலை போலீஸர் புழல் சிறையில் உள்ள விக்னேஷிடம் வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com