ஜல்லிக்கட்டு: இன்றைய அரசுகள் மீது பழிபோட முயலும் திமுக: வைகோ குற்றச்சாட்டு

ஜல்லிக்கட்டுப் பிரச்னையில் உண்மைக் குற்றவாளியான திமுக, இன்றைய மத்திய, மாநில அரசுகள் மீது பழி போட்டு அரசியல் லாபம் தேட முயல்வதாக மதிமுக பொதுச் செயலாளர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜல்லிக்கட்டு: இன்றைய அரசுகள் மீது பழிபோட முயலும் திமுக: வைகோ குற்றச்சாட்டு

ஜல்லிக்கட்டுப் பிரச்னையில் உண்மைக் குற்றவாளியான திமுக, இன்றைய மத்திய, மாநில அரசுகள் மீது பழி போட்டு அரசியல் லாபம் தேட முயல்வதாக மதிமுக பொதுச் செயலாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு வைகோ மின்னஞ்சல் மூலமாக புதன்கிழமை அனுப்பிய கடித விவரம்:

ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த விளையாட்டு, ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தமிழர்களின் கலாசார நிகழ்வாக நடத்தப்பட்டு வருகின்றது. 

இந்த விளையாட்டில், காளை மாடுகளுக்கு எந்தக் காயமும் ஏற்படுவது இல்லை. மாடுகளைத் தழுவ முனைகின்ற இளைஞர்களுக்குச் சில நேரங்களில் காயம் ஏற்படும்.

வீடுகளில் விவசாயிகள் வளர்க்கின்ற இந்தக் காளை மாடுகளை முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2011 ஜூலை 11 ஆம் தேதியன்று, காடுகளில் உலவுகின்ற கொடிய விலங்குகளின் பட்டியலில் இணைத்தது. இந்த
விலங்குகளை, காட்சிப் பொருளாக நிகழ்ச்சிகளில் அனுமதிக்கக்கூடாது என்பதற்கான பட்டியல் அது.

அப்பொழுது மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் இதனை நியாயப்படுத்தி, ஜல்லிக்கட்டு என்பது காட்டுமிராண்டி நிகழ்ச்சி என்றார்.

இந்தப் பிரச்சினையில் உண்மைக் குற்றவாளியான திமுக தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருகின்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, பழியை இன்றைய மத்திய-மாநில அரசுகள் மீது போட்டு, தனக்கு அரசியல் லாபம் தேட முயற்சிக்கின்றது. இந்தப் பிரச்சினையில் உச்சநீதிமன்றம் இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட பிறகும், தீர்ப்பை வெளியிடாமல் நிறுத்தி வைத்து இருக்கின்றது.

ஆனால், இப்போது நடக்கின்ற அமைதிப்போராட்டம், 1965 இல் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் போல ஒரு போர்க்களமாக வெடிக்கக்கூடிய அபாயம் உள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், சட்ட வல்லுநர்களைக் கலந்து ஆலோசித்து, உடனடியாக கொடிய விலங்குகள் பட்டியலில் இருந்து காளை மாடுகளை நீக்கி, அதனை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சட்டமாக நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com