ஜல்லிக்கட்டு விவகாரம்: மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தில் நாளை அவசரக்கூட்டம்

ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இந்த போராட்டங்களில் அதிக அளவில் கலந்து கொண்டுள்ளனர். போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து ஜல்லிக்கட்டு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுக்க உள்ளார். 

இந்நிலையில், மத்திய சுற்றுச் சூழல் மந்திரி அனில் மாதவ் தாவே தலைமையில் ஜல்லிக்கட்டு குறித்து முக்கிய முடிவெடுப்படுப்பது தொடர்பாக நாளை தில்லியில் அவசரக் கூட்டம் நடைபெறவுள்ளது.
 
மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தில் நாளை மதியம் 1 மணியளவில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் மத்திய சுற்றுச் சூழல் துறையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com