தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வுப் பணியில் மாணவர்களை பயன்படுத்த எதிர்ப்பு

தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வுப் பணியில் மாணவர்களை பயன்படுத்தக்கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வுப் பணியில் மாணவர்களை பயன்படுத்தக்கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இக்கட்சியின் காரைக்கால் மாவட்டக் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : புதுச்சேரி துணை நிலை ஆளுநர் வாரந்தோறும் காரைக்கால் மக்களிடம் காணொலி மூலம் நடத்தும் குறை கேட்பில் வெகு குறைவான மக்களே கலந்துகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. புகார்கள் மற்றும் நடவடிக்கை குறித்து எந்த பதிவேடும் மாவட்ட நிர்வாகம் வைத்துக்கொள்ளவில்லை. குறைகேட்பு கண்துடைப்பு செயலென மக்கள் கருதும் நிலை வந்துவிட்டது. எனவே மாவட்ட ஆட்சியர், இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்.

தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வுப் பணியில் பள்ளி, கல்லூரி மாணவர்களை மாவட்ட நிர்வாகம் பயன்படுத்துகிறது. திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் மக்களிடையே போதுமான வரவேற்பை பெறவில்லை. நகரங்கெங்கும் குப்பைகள் தேங்கிக் கிடக்கிறது. மாணவர்கள் குப்பைகள் அள்ளுவதால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த பயன்பாட்டுக்கு மாணவர்களை பயன்படுத்தக் கூடாது.

திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு எந்தவித வசதியும் நிர்வாகம் செய்துத்தராததால், உடலளவில் அவர்களும் பாதிக்கப்படுகின்றனர். வேலை செய்வோருக்கு குறித்த ஊதியமும் தரபடவில்லை என்ற புகார் வருகிறது. இந்த பிரச்னையை மாவட்ட நிóர்வாகம் களையவேண்டும்.

காரைக்கால் தீயணைப்பு வீரர் புகழேந்தி, கடலில் தத்தளித்தவர்களை மீட்கச் சென்றபோது உயிரிழந்தார். அவரது வீரதீர செயலை பாராட்டும் வகையில் தேசிய விருது வழங்க மத்திய அரசுக்கு புதுச்சேரி அரசு பரிந்துரைக்கவேண்டும்.

கூட்டத்துக்கு மாவட்டக் குழு உறுப்பினர் என்.ராமர் தலைமை வகித்தார். மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் அ.வின்சென்ட், வட்ட செயலர் என்.எம்.கலியபெருமாள், உறுப்பினர்கள் அ.திவ்யநாதன், எஸ்.எம்.தமீம், என்.பிச்சையன், அ.பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com