துளியும் வன்முறையின்றி நடக்கும் இளைஞர்களின் போராட்டத்திற்கு வாழ்த்துக்கள்: மம்மூட்டி வீடியோ பேச்சு

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்துள்ள இளைஞர்களின் எழுச்சி போராட்டம் இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்து விட்டது. இது
துளியும் வன்முறையின்றி நடக்கும் இளைஞர்களின் போராட்டத்திற்கு வாழ்த்துக்கள்: மம்மூட்டி வீடியோ பேச்சு

கொச்சி: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்துள்ள இளைஞர்களின் எழுச்சி போராட்டம் இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்து விட்டது. இது குறித்த பல திரையுலக பிரபலங்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது கேரளா சூப்பர் ஸ்டார் மம்மூட்டி இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராமல், எந்த ஒரு தலைவரின் துணையும் இன்றி ஆண், பெண், சாதி, மத பாகுபாடு இன்றி லட்சக்கணக்கான இளைஞர்கள் துளியும் வன்முறையின்றி போராடி கொண்டு இருக்கிறார்கள், அவர்களின் இந்த போராட்டம் இந்தியாவுக்கே ஒரு எடுத்துக்காட்டு. வாழ்த்துக்கள் தோழர்களே என சுத்தத் தமிழில் பேசி தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com