குடியரசுத்தலைவர் தேர்தலுக்கு பிறகு எல்லாம் மாறும்: ஓ.பன்னீர்செல்வம் 

குடியரசுத்தலைவர் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் உள்ள பிரச்னைகள் அனைத்தும் சீராகும் என அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின்ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
குடியரசுத்தலைவர் தேர்தலுக்கு பிறகு எல்லாம் மாறும்: ஓ.பன்னீர்செல்வம் 

குடியரசுத்தலைவர் தேர்தல் திங்கள்கிழமை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியைச் சேர்ந்தவருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:

குடியரசுத்தலைவர் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் முற்றிலும் நிச்சயம் மாறும். அனைத்து குழப்பங்களுக்கும் விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன் என்றார்.

நாடு முழுவதும் இன்று நடைபெறும் குடியரசுத்தலைவர் தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து வரும் 20-ந் தேதி வாக்கு எண்ணிக்கை
நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் (பாஜக), மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர் மீரா குமார் (காங்கிரஸ்) ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர்.

முன்னதாக, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக அதிமுக தற்போது பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி அணி, தினகரன் அணி என பிரிந்து செயல்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல், ஜெயலலிதாவின் மறைவில் பல்வேறு சந்தேகங்கள் தமிழக மக்களிடத்தில் எழுந்துள்ளது. அதற்கு இன்றுவரை தக்க நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. 

இந்நிலையில், குடியரசுத்தலைவர் தேர்தலைப் பொறுத்தவரையில் பிரிந்து கிடக்கும் அதிமுக-வின் அனைத்து பிரிவுகளும் ஒருசேர பாஜக வேட்பாளரான ராம்நாத் கோவிந்துக்கு தங்களது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com