பாகூர் தாலுகா  அலுவலகத்தை  முற்றுகையிட முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 78 பேர் கைது

விவசாயிகள் கோரிக்கைகளை தீர்க்க வலியுறுத்தி பாகூர் தாலுகா அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு
பாகூர் தாலுகா  அலுவலகத்தை  முற்றுகையிட முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 78 பேர் கைது

புதுச்சேரி : விவசாயிகள் கோரிக்கைகளை தீர்க்க வலியுறுத்தி பாகூர் தாலுகா அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 78 பேர் கைது செய்யப்பட்டனர்.

விவசாய மேம்பாட்டிற்காக எம்எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், போர்க்கால அடிப்படையில் நில சீர்திருத்த சட்டத்தை அமல்படுத்தி வீடற்ற கிராமப்புற மக்களுக்கு 8 சென்ட் நிலம், மனைப்பட்டா வழங்க வேண்டும், விவசாய நிலை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் ஏற்கெனவே நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பாகூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரால் நடத்தப்பட்டது. மாநில துணை செயலாளர்கள் ராமமுர்த்தி. சலிம்  ஆகியோர் தலைமை யில் 100 க்கும் மேற்பட்டோர் பாகூர் வட்டாட்சியர் அலுவலகம் வந்தனர். 

அவர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் நெல், கரும்பு, ஏர்கலப்பை உள்ளிட்ட விவசாய பொருட்களை கையில் ஏந்தி வந்தனர். பாகூர் வட்டாட்சியர் அலுவலகம் உள்ளே நுழைந்த அவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த மேஜை நாற்காலிகளை சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 78 பேரை கைது செய்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் கலியமூர்த்தி, ராஜா, சரளா, வசந்தி, அமுதா, மணிவண்ணன், விஜயபாலன், மாசிலாமணி, பெருமாள், வள்ளி உள்பட பலர் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com