சிவலிங்கத்தைத் தேடி நெடுஞ்சாலையில் 20 அடி பள்ளம்: போலி சாமியார் உட்பட 5 பேர் கைது

தெலுங்கானா மாநிலம் தேசிய நெடுஞ்சாலையைப் போலி சாமியாரின் பேச்சைக் கேட்டு சிவலிங்கத்திற்காக 20 அடி வரைத் தோண்டி போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்திய பஞ்சாயத்து தலைவர் உட்பட 5 பேர் கைது.
சிவலிங்கத்தைத் தேடி நெடுஞ்சாலையில் 20 அடி பள்ளம்: போலி சாமியார் உட்பட 5 பேர் கைது

தெலுங்கானா மாநிலம் தேசிய நெடுஞ்சாலையைப் போலி சாமியாரின் பேச்சைக் கேட்டு சிவலிங்கத்திற்காக 20 அடி வரைத் தோண்டி போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்திய பஞ்சாயத்து தலைவர் உட்பட 5 பேர் கைது.

ஐதிராபாத் ஜான்கான் மாவட்டத்திலுள்ள பெம்பார்தி கிராமத்தைச் சேர்ந்தவர் லகான் மனோஜ். தீவிர சிவ பக்தரான இவர் தினமும் தன் கனவில் சிவன் வந்து பேசுவார் என்று ஊர் மக்களிடையே கூறி வந்த நிலையில் மக்களும் இவரைச் சாமியாராகவே நம்பத் தொடங்கியுள்ளனர். வாராங்கால் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் இவர் பூசையும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கனவில் நேற்று சிவன் வந்ததாகவும், அவர் தினம் பூசை செய்யும் இடத்தில் மண்ணிற்கடியில் ஒரு சிவ லிங்கம் இருப்பதாகவும், அதைத் தோண்டியெடுத்து தனக்கு ஒரு ஆலயம் கட்டுமாறு சிவன் கூறியதாகவும் சொல்லியுள்ளார்.

கிராம பஞ்சாயத்து தலைவர் உட்பட நகராட்சி அதிகாரிகளும் இவரது பேச்சைக் கேட்டு நெடுஞ்சாலையில் ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் தோண்ட ஆரம்பித்துள்ளனர். சாலையின் நடுவே 20 அடி வரை தோண்டியும் எதுவும் கிடைக்காத நிலையில் மனோஜ் சாமியாடிக் கொண்டே இன்னும் ஆழம் தோண்டவேண்டும் என்றுள்ளார். இதனையடுத்து போக்குவரத்து நெரிசல் காரணமாக அங்கு விரைந்த காவலர்கள் பஞ்சாயத்துத் தலைவர், போலி சாமியார் மனோஜ் உட்பட 5 பேரைக் கைது செய்து சென்றுள்ளனர். கைது செய்யப்பட்ட நிலையில் மனோஜ் செய்தியாளர்களிடம் பேசும்பொழுதும் இந்த இடத்தில் நிச்சயமாக சிவலிங்கம் உள்ளது என்று பரவச நிலையில் சாமியாடியபடியே கூறிக்கொண்டுச் சென்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com