குடியரசுத்தலைவர் வேட்பாளர் தேர்வு: தில்லியில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது

 குடியரசுத்தலைவர் வேட்பாளர் குறித்து முடிவு செய்ய  எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.

புதுதில்லி:  குடியரசுத்தலைவர் வேட்பாளர் குறித்து முடிவு செய்ய  எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.

குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தில்லியில் இன்று ஆலோசனை கூட்டம் நடத்துகிறது.  இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர் பங்கேற்கின்றனர்.

இதில், பிரகாஷ் அம்பேத்கரை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.  குடியரசுத் தலைவர் வேட்பாளராக தலித் சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்தை பாஜக நிறுத்தியுள்ளது.

எனவே, அவரை எதிர்த்து மற்றொரு வலுவான தலித் தலைவரை நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளது. எனினும் நேற்று இரவு முன்னாள் சபாயாகர் மீரா குமாரை  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்துப் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com