பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அண்ணா பல்கலைக்கழகத்தில் தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.  தரவரிசை பட்டியலை www.annauniv.edu, www.tnea.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 550க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு 1 லட்சத்து 40 ஆயிரத்து 451 பேர் விண்ணப்பம் செய்துள்ளவர்களுக்கான 16 இலக்கம் கொண்ட ரேண்டம் எண்ணை நேற்று அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது.

இந்நிலையில் இன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உயர்க் கல்வித்துறை அமைச்சர் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். வரும் 27ம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வெளியானப் பின் கலந்தாய்வு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com