ஜி.எஸ்.டி மசோதாவை புறக்கணிப்பதன் மூலம் ஜம்மு - காஷ்மீர் இழப்புகளை சந்திக்கும்: அருண் ஜேட்லி 

நாடுமுழுவதும் ஜூலை 1ம் தேதி நாளை ஜி.எஸ்.டி மசோதா அமல்படுத்தப்பட உள்ள நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநில அரசு ஜி.எஸ்.டி.
ஜி.எஸ்.டி மசோதாவை புறக்கணிப்பதன் மூலம் ஜம்மு - காஷ்மீர் இழப்புகளை சந்திக்கும்: அருண் ஜேட்லி 

புதுதில்லி:  நாடுமுழுவதும் ஜூலை 1ம் தேதி நாளை ஜி.எஸ்.டி மசோதா அமல்படுத்தப்பட உள்ள நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநில அரசு ஜி.எஸ்.டி. குறித்த தனது நிலைப்பாட்டை இதுவரை உறுதி செய்யவில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

ஜி.எஸ்.டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி ஜூலை 1-ல் அமலுக்கு வருகிறது. அதற்கு முன், அனைத்து மாநிலங்களும், ஜி.எஸ்.டி., சட்ட மசோதாவை, சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும்.

பல மாநிலங்கள், அதை நிறைவேற்றியுள்ள நிலையில் ஜம்முகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநில என்பதால் அம்மாநில சட்டப்பேரவையில் ஜி.எஸ்.டி. மசோதா தாக்கல் செய்யப்பட்டு குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். சமீபத்தில் ஸ்ரீநகரில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில்  சிலர் ஜி.எஸ்.டி யை ஏற்றுக்கொள்வது, நாட்டின் மற்ற பகுதிகளுடன் பொருளாதார ஒருங்கிணைப்புக்கு வழிவகுக்கும் எனக் கருதினர். இன்னும் சிலர் ஜி.எஸ்.டிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மாநில அரசு திட்டவட்டமாக ஜி.எஸ்.டி மசோதாவை அமல்படுத்தப் போவதில்லை என அறிவித்துள்ளது.

இதனால் அம்மாநில அரசு பல்வேறு இழப்புகளை சந்திக்கும் என்றும் ஜி.எஸ்.டி மசோதாவினால் மத்திய அரசிடம் இருந்து கிடைக்க கூடிய பெருமதிப்புகளை இழக்க நேரிடும் என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com