அரசியல் கிசு கிசு: ரசிகர்கள், வழக்கறிஞர்களுடன் கமல் முக்கிய ஆலோசனை - அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பு?

மிக நீண்ட காலமாகவே திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய தலைவருக்கான தேடலில் உள்ளது தமிழக அரசியல் களம்.
அரசியல் கிசு கிசு: ரசிகர்கள், வழக்கறிஞர்களுடன் கமல் முக்கிய ஆலோசனை - அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பு?

மிக நீண்ட காலமாகவே திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய தலைவருக்கான தேடலில் உள்ளது தமிழக அரசியல் களம்.

எப்போதும் பிரபலங்களுக்கே தனது ஒட்டு மொத்த ஆதரவையும் கொடுத்து பழகிய தமிழக மக்கள் தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டாரான ரஜின்காந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று அழைத்ததோடு, அவருக்கான பெரும் ஆதரவையும் ரசிகர்கள் தெரிவிதனர்.

]ஆனால் நான் இப்போ வருவேன் அப்போ வருவேன்... வரவேண்டிய நேரத்தில் வருவேன் என்று வசனம் பேசியே காலம் கடத்தியதால் ரசிகர்கள் மட்டுமல்லாமல் மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருந்தவர்களும், ஏமாற்றமடைந்தனர்.

தற்போது தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வெற்றிடத்தை நிரப்பப் போகும் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில்  ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த மக்கள் போராட்டம்,

தற்போது நடந்து வரும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்கும் நெடுவாசல் போராட்டம் என்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளிலும் நடிகர் கமல்ஹாசன் தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.

அவரை அரசியலுக்கு வரும்படி பல்வேறு அமைப்பினர் வற்புறுத்தி வருகின்றனர். அதற்கு பதிலளித்த கமல், ‘நான் கோபக்காரன். எனக்கு அரசியல் சரிப்பட்டு வராது’ என்று பதிலளித்தார். என்றாலும், அவரை அரசியலுக்கு வர ரசிகர் மன்றத்தினர் சிலர் நிர்ப்பந்தித்து வருவதாக தெரிகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில், தமிழகம் முழுவதும் உள்ள தனது ரசிகர் மன்றம் மற்றும் நற்பணி இயக்க நிர்வாகிகளையும், அதிலுள்ள வழக்கறிஞர்களையும் இன்று நேரில் அழைத்து முக்கிய ஆலோசனை நடத்தஅவரை அரசியலுக்கு வரும்படி பல்வேறு அமைப்பினர் வற்புறுத்தி வருகின்றனர்.

அதற்கு பதிலளித்த கமல், ‘நான் கோபக்காரன். எனக்கு அரசியல் சரிப்பட்டு வராது’ என்று பதிலளித்தார். என்றாலும், அவரை அரசியலுக்கு வர ரசிகர் மன்றத்தினர் சிலர் நிர்ப்பந்தித்து வருவதாக தெரிகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில், தமிழகம் முழுவதும் உள்ள தனது ரசிகர் மன்றம் மற்றும் நற்பணி இயக்க நிர்வாகிகளையும், அதிலுள்ள வழக்கறிஞர்களையும் இன்று நேரில் அழைத்து முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

ஊடக்கத்தினர் யாரையும் இந்த கூட்டத்தில் அனுமதிக்கவில்லை. கமல். இன்று அவர் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பாரா என்று தெரியவில்லை. இதுகுறித்து நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘ரசிகர் மன்ற நிர்வாகிகளை கமல் சந்தித்து ஒரு வருடத்துக்கும் மேலாகி விட்டது.

‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன் சந்தித்தார். தற்போது மன்றம் மற்றும் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கேட்டுக்கொண்டதற்காக இன்று சந்தித்துப் பேசுகிறார். அரசியல் பற்றி எதுவும் பேச மாட்டார்’ என்று சொல்லப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com