5 மாதங்களுக்கு பின் தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் மீன்பிடிக்கும் பணியைத் தொடங்கிய மீனவர்கள் 

புதுச்சேரி தேங்காய்த்திட்டு துறைமுக முகத்துவாரம் ஒருபகுதி தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்பட்டதால் 5 மாதங்களுக்கு பின் மீன்பிடிப்பதற்காக இன்று நள்ளிரவு முதல் மீனவர்கள் சென்றனர்.

புதுச்சேரி தேங்காய்த்திட்டு துறைமுக முகத்துவாரம் ஒருபகுதி தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்பட்டதால் 5 மாதங்களுக்கு பின் மீன்பிடிப்பதற்காக இன்று நள்ளிரவு முதல் மீனவர்கள் சென்றனர்.

புதுச்சேரி பகுதியில் உள்ள 18 மீனவ கிராம மக்களின் வாழ்வாதாராமாக தேங்காய்த்திட்டு துறைமுகம் உள்ளது. இங்கு 250-க்கு மேற்பட்ட விசைப்படகுகள், 500-க்கு மேற்பட்ட கட்டுமரங்கள், நாட்டு படகுகள், பைபர் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இங்கிருந்து மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித் தொழிலை செய்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு துறைமுக முகத்துவாரம் மணற்படுகைகளால் அடைபட்டு போனது. இதனால் புதுவை மற்றும் சுற்றுப்புற மீனவர்கல் மீன்பிடிக்கச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த 24.11.16-ல் மத்திய அரசின் டிசிஐ நிறுவனம் சார்பில் டிசிஐ கங்கா என்ற தூரப்பண கப்பல் 4.12.16-ல் ஆழப்படுத்த கொண்டு வரப்பட்டது. எனினும் பல்வேறு தொழில்நுட்பக் காரணங்களால் கடந்த 13.1.17-ல் தான் இப்பணி தொடங்கியது.

மீனவர்கள் வாழ்வாதாரத்தைக் கருதி, முகத்துவாரத்தை துரிதமாக ஆழப்படுத்தி, வாரப்படும் மணல் தற்காலிகமாக 1 கி.மீ அருகிலேயே கொட்டப்பட்டது. இந்நிலையில் பல்வேறு தொழில்நுட்பத் தடங்கல்களையும் தாண்டி துறைமுக முகத்துவாரம் கடந்த 13-ம் தேதி ஒருபுறம் ஆழப்படுத்தும் பணி நிறைவடைந்து, மீனவர்கள் தடையின்றி சென்று வர வழி செய்யப்பட்டது.

இதையடுத்து ஒரே மீன்பிடி படகு சென்று வரும் வகையில் ஆழப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மீனவர்கள் மீன்பிடித் தொழிலை 5 மாதங்களுக்கு பின் தொடங்கி உள்ளனர். துறைமுக முகத்துவாரம் தூர்வாரும் பணி தாமதம் ஆனதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதற்காக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். 

துறைமுக முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணியை புதுவை அரசே மேற்கொள்ள வேண்டும். இதற்காக தனியாக தூரப்பண கப்பலை வாங்கி பராமரித்து, நிரந்தரமாக முகத்துவாரம் அடைபடாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com