தேசிய நெடுஞ்சாலை மைல் கல்களில் ஆங்கிலத்தை அழித்து ஹிந்தி எழுத்துக்கள்: வைகோ கண்டனம்

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கல்களில் ஆங்கில எழுத்துக்களை அழித்துவிட்டு, ஹிந்தியில்
தேசிய நெடுஞ்சாலை மைல் கல்களில் ஆங்கிலத்தை அழித்து ஹிந்தி எழுத்துக்கள்: வைகோ கண்டனம்

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கல்களில் ஆங்கில எழுத்துக்களை அழித்துவிட்டு, ஹிந்தியில் எழுதப்படுவதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கல்களில் கடந்த சில மாதங்களாக ஆங்கில எழுத்துக்கள் அழிக்கப்பட்டு ஹிந்தி எழுதப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை 75, 77 எனும் இந்தச் சாலைகள், வேலூர், திருவண்ணாமலை வழியாகச் செல்லும் வழியில் தற்போது இந்தி, தமிழ் அல்லது கன்னட எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன. ஆங்கில எழுத்துகள் அகற்றப்பட்டு விட்டன. 

இதனால், சுற்றுலாப் பயணிகளும், வணிகர்களும் வடகிழக்கு மாகாணங்களில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக வருகின்ற மக்களும் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். வேலூரில் உள்ள தோல் தொழிற்சாலை அதிபர்கள், ஆங்கிலத்தை அகற்றியது தங்களை மிகவும் பாதிப்பதாகத் தெரிவித்துள்ளனர். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்ட பிற மாநிலத்தவர்களும்கூட இதனால் பாதிக்கப்படுவதாகக் கூறி இருக்கின்றனர். 

வீரமும் தியாகமும் நிறைந்த போராட்டத்தால் தமிழகத்திலிருந்து அகற்றப்பட்ட ஹிந்தியை, மீண்டும் திணிப்பதற்குப் புதிதாகச் சிலர் புறப்பட்டு இருக்கின்றார்கள். தமிழகத்தின் கல்வித்துறையில், நீதி, நிர்வாகத் துறைகளில் தமிழ் மொழி முதல் இடம் பெற வேண்டும். ஆங்கிலம் தொடர்ந்து நீடிக்க வேண்டும். இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் ஆங்கிலம்தான் ஆட்சி மொழி. இங்கு வாழும் ஆங்கிலோ இந்தியர்களின் தாய்மொழி ஆங்கிலம்தான்.

ஆங்கிலப் படிப்புதான் தமிழக இளைஞர்களுக்கு அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. 
ஒரே மதத்தைப் பின்பற்றிய பாகிஸ்தான், உருது மொழித் திணிப்பால் வங்கதேசம் என்ற நாட்டை உருவாக்கியது. ஒரே மதத்தைப் பின்பற்றுகின்ற எண்ணற்ற சின்னஞ்சிறு நாடுகள், மொழி ஆதிக்கத்தால் தனித்தனி நாடுகளாக ஆகிவிட்டன. அயர்லாந்து தனி நாடாக ஆனதற்குக் காரணமே மொழித் திணிப்புதான்.

ஆனால், தமிழகத்தில் அவர்களின் கனவு பலிக்காது. மத்திய அரசு இந்தப் போக்கைக் கைவிடாவிடில், கடுமையான எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com