ஜெயலலிதாவை அப்பல்லோவில் நாங்கள் யாரும் பார்க்கவில்லை: புகழேந்திக்கு ஓபிஎஸ் பதிலடி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் 74 நாள்கள் சிகிச்சைப்பெற்றப்போது நாங்கள் யாரும் அவரை பார்க்க முடியவில்லை
ஜெயலலிதாவை அப்பல்லோவில் நாங்கள் யாரும் பார்க்கவில்லை: புகழேந்திக்கு ஓபிஎஸ் பதிலடி

தூத்துக்குடி: மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் 74 நாள்கள் சிகிச்சை பெற்றபோது நாங்கள் யாரும் அவரை பார்க்க முடியவில்லை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற கட்சி உறுப்பினர் இல்ல திருமண விழாவில் கலந்துக்கொள்ள வந்த ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற புகைப்படங்கள் விரைவில் வெளியாகும் என அதிமுக (அம்மா) அணியின் கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தி கூறியிருக்கிறார். இது குறித்து உங்கள் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ஓபிஎஸ் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது நாங்கள் யாரும் அவரை பார்க்க முடியாத சூழல் இருந்தது, எனவே, புகழேந்தியின் பேச்சுக்கு பதிலளிக்க தேவையில்லை. மருத்துவர்கள் அளித்த அறிக்கைகளை மட்டுமே நாங்கள் முழுவதும் நம்பினோம் என கூறினார்.

மேலும், அவ்வப்போது அரசியல் காரணங்களுக்காக தனக்குரிய பாணியில் யாரும் சிந்திக்காத வகையில் கருத்து சொல்வது ஸ்டாலினுக்கு வாடிக்கையாகிவிட்டது என்று குற்றம்சாட்டிய ஓபிஎஸ், தான் முதல்வராக இருந்த காலத்திலேயே ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தமிழகம் வறட்சியாக இருக்கிறது. விவசாய மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கூடுதல் வறட்சி நிவாரணம் மத்திய, மாநில அரசு வழங்கவேண்டும் என்றார்.

புகழேந்திக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. அவரிடம் புகைப்படம் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com