வாக்கு இயந்திர முறைகேடு குறித்து நிரூபிக்க வருமாறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்பாடு குறித்து தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி விளக்கம் அளித்துள்ளார்.
வாக்கு இயந்திர முறைகேடு குறித்து நிரூபிக்க வருமாறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு

புதுதில்லி:  மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்பாடு குறித்து தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி விளக்கம் அளித்துள்ளார்.  5 மாநில தேர்தல் முடிவுக்கு பிறகு வாக்கு இயந்திரங்களில் முறைகேடு இருப்பதாக  சில அரசியல் கட்சிகள் புகார் தெரிவித்திருந்தன.  

மேலும் வரும் ஒப்புகைச்சீட்டு இயந்திரம் பொருத்திய வாக்கு இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும் எனவும்  கோரிக்கை வைத்தனர். இதன் பின்னர் அரசியல் கட்சிகள்  புகார் குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்தது.

இந்நிலையில் தில்லியில் தேர்தல் ஆணையம் இன்று இதுகுறித்து பேசும் போது வாக்கு இந்திரங்களில் முறைகேடு செய்ய வாய்ப்பு  இல்லை என திட்டவட்டமாக கூறியுள்ளது.  

வெளிப்படையான தேர்தல் நடைபெற வேண்டும் என்பதில் ஆணையம் உறுதியாக உள்ளது என்றும் வாக்கு இயந்திரத்தின் உள் வட்டத்தை மாற்ற முடியாது. வாக்கு இந்திரம் வலுவான தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டுள்ளன என்றும் தேர்தல் ஆணையர் கூறியுள்ளார்.

மேலும் வாக்கு இயந்திர முறைகேடு குறித்து நிரூபிக்க ஜூன் மூன்றாம் தேதி வருமாறு அரசியல் கட்சிகளுக்கு சவால் விடுத்துள்ளது தேர்தல் ஆணையம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com