நடப்பு நிதியாண்டின்  நேரடி வரி வசூல் 15.2% உயர்வு 

 நடப்பு நிதியாண்டின் கடந்த 7 மாதங்களில் நேரடி வரிவசூல் வசூல் 15.2% உயர்ந்து
நடப்பு நிதியாண்டின்  நேரடி வரி வசூல் 15.2% உயர்வு 

புதுதில்லி:  நடப்பு நிதியாண்டின் கடந்த 7 மாதங்களில் நேரடி வரிவசூல் வசூல் 15.2% உயர்ந்து ரூ4.39 டிரில்லியன் ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வரி வசூலில்  தனிப்பட்ட வருமான வரி மற்றும் பெருநிறுவன வரியும் உள்ளடக்கியது எனவும்  2017-18 க்கான நேரடி வரி வசூல் மொத்த வரவு ரூ .9.8 டிரில்லியனாக இருக்கும் என  கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது வரை மொத்த வரவு செலவுத் திட்ட மதிப்பில் 44.8% வசூலாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.  

இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதிக்கான நிகர வசூலை விட 15.2 சதவிதம் அதிகம்  என்று நிதி அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com