அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கிகளை வலிமைப்படுத்த கூடுதல் நிதி: அருண் ஜேட்லி

அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கிகளை மேலும் வலிமைப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில், கூடுதல்
அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கிகளை வலிமைப்படுத்த கூடுதல் நிதி: அருண் ஜேட்லி

அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கிகளை மேலும் வலிமைப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில், கூடுதல் மூலதன முதலீடு செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.   

ஹரியானா மாநிலம் குருகிராமில் நடைபெற்ற பொதுத்துறை வங்கிகளுக்கான கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய அவர், நாட்டின் வளர்ச்சியில் பொதுத்துறை வங்கிகளுக்கு முக்கியப் பங்கிருப்பதால், அவற்றை மேம்படுத்த வலுவான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இருப்பதாக தெரிவித்தார். 

வாராக்கடன் விவகாரத்தால் பொதுத்துறை வங்கிகள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், சுமார் 2 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை திரட்டுவதற்கான திட்டம் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார். இருப்பினும், பொதுத்துறை வங்கிகளின் மூலதனத்தைப் பெருக்குவதற்காக பத்திரங்கள் மற்றும் வங்கிகளின் பங்கு விரிவாக்கம் செய்யவும் அரசு முடிவு செய்யதுள்ளது என்றும் வரும் நிதி நிலை அறிக்கையில் பொதுத்துறை வங்கிகளுக்கு கூடுதல் நிதியை ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகவும் ஜேட்லி தெரிவித்தார். 

மேலும் கடந்த மூன்றரை ஆண்டுகளில், பொதுத்துறை வங்கிகளில்கடன் பத்திரங்கள் உள்ளிட்டவை மூலம ரூ.51 ஆயிரம் கோடி அரசு மூதலீடு செய்துள்ளது என்றார்.  

அரசாங்கம் பொதுமக்களுக்கு நிறைய பணம் செலவழிக்கிறதென்றும், வெளிநாட்டு முதலீடுகள் வருவதாகவும் வங்கியாளர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com