65 ஆண்டுகள் பழமையான அக்பர் நீராவி ரயில் தடம்புரண்டது

65 ஆண்டுகள் பழமையான அக்பர் நீராவி ரயில் தடம்புரண்டது. ஓட்டுநர்கள் ஓடும் ரயிலில் இருந்து குதித்து உயிர்தப்பினர்.
65 ஆண்டுகள் பழமையான அக்பர் நீராவி ரயில் தடம்புரண்டது

ரேவாரி: 65 ஆண்டுகள் பழமையான அக்பர் நீராவி ரயில் தடம்புரண்டது. ஓட்டுநர்கள் ஓடும் ரயிலில் இருந்து குதித்து உயிர்தப்பினர்.

ஹரியானாவில் உள்ள ரேவாரியில் அக்பர் என பெயரிடப்பட்ட 65 ஆண்டுகள் பழமையான நீராவி ரக ரயில்களில் ஒன்றாக இன்றளவும் இயங்கி வந்தது. இந்த ரயில் இன்று ரேவாரியில் இருந்து சென்றபோது ரயில் எஞ்சினியில் பிரேக் பிடிக்காததால் 2 கி.மீட்டர் தூரத்திற்குள் ரயில் எஞ்சின் தடம் புரண்டது. அதன் ஓட்டுநர்கள் ஓடும் ரயிலில் இருந்து குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். 

இந்த ரயில் 20-க்கும் மேற்பட்ட பாலிவுட் திரைப்படங்களில் இடம்பெற்றுள்ளது. அக்பர் பெயர் கொண்ட இந்த ரயில், முகலாய பேரரசர் மற்றும் பழைய நீராவி எந்திரங்களில் ஒன்றாகும்.

சிட்டான்ஜான் லோகோமோட்டிவ் வெர்க்ஸ் என்ற எந்திரத்தால் கட்டப்பட்டது, 1965-ஆம் ஆண்டு முதல் சேவைக்கு கொண்டுவரப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com