தமிழகத்தில் நடைபெற்று வரும் வருமானவரி சோதனை வரவேற்க கூடிய ஒன்று : பொன் .ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் நடைபெற்று வரும் வருமானவரி சோதனை வரவேற்க கூடிய ஒன்று என மத்திய கப்பல்
தமிழகத்தில் நடைபெற்று வரும் வருமானவரி சோதனை வரவேற்க கூடிய ஒன்று : பொன் .ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் நடைபெற்று வரும் வருமானவரி சோதனை வரவேற்க கூடிய ஒன்று என மத்திய கப்பல், சாலை மற்றும் நிதித்துறை இணை அமைச்சர் பொன் .ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல்  வ.உ.சிதம்பரனாரின் 81வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடரத்தில் அவர் பிறந்த இல்லத்தில் அமைந்து உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழகத்தில் வருமான வரித்துறையினர் நடத்திவரும் சோதனையில் எந்தவித அரசியல் காழ்புணர்ச்சியும் இல்லை, நாட்டில் நடை பெற்ற மிக பெரிய இந்த சோதனை பல காலமாக திட்டமிட்டு ஆதரத்தின் அடிப்படையில் வருமானவரித்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களை ஆய்வு செய்தால் தேவையான கூடுதல் ஆலோசனைகளை அரசுக்கு வழங்க முடியும் என்பதால் ஆளுநர் மாவட்டங்களில் ஆய்வு செய்து வருகிறார்.அவர் அரசியல் சட்ட விதிகளுக்கு மாறாக எந்த ஆணையையும் பிறப்பிக்கவில்லை என்றார்.

அரசு துறையினர்,வ உ சி வழித்தோன்றல்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள். தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் மிகப்பெரிய அளவிலான பனாமா கப்பல் வரும் வகையில் மூன்றாயிரம் கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் இன்னும் மூன்றாண்டுகளில் முடிவடையும் என மத்திய கப்பல்,சாலை போக்குவரத்து மற்றும் நிதித்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

      துறைமுக வளாகத்தில் நடைபெற்ற தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாரின்  81வது நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர்,பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,

 ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை  வணிக ரீதியில் எதிர்க்கும் வகையில் சுதேசிய கப்பலை விட்டவர் வ.உ.சிதம்பரனார் என அவருக்கு புகழாரம் சூட்டினார்.எனவே வ.உ.சிதம்பரனாரின் நினைவை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் ஒரு அருங்காட்சியகம் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படவுள்ளது.தூத்துக்குடி துறைமுகத்தில் தற்போதுள்ள மிதவை ஆழம் 14 மீட்டரிலிருந்து 16.5 மீட்டராக உயர்த்தப்பட்டு வருகின்றன.இந்த பணி முடிவடைந்த பின் ஒரு லட்சத்து இருபதாயிரம் டன் எடையுள்ள கப்பல்கள் வந்து செல்ல முடியும் என்றார்,

      இதன் மூலம் தென்பகுதி உலக வர்த்தகத்தில் முக்கிய இடத்தை பெறும் என்றார்.இந்த பணிகள் முடிவடைந்த பின் தேவையின் அடிப்படையில் வெளித்துறைமுக விரிவாக்க பணி மேற்கொள்ளப்படும்,GST பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் தவறான கருத்துகளை பரப்பி வருவது தவறு, மலேசியா நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் விநியோகம் செய்யபடாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது தொடர்பாக தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும் என்றார்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் வருமானவரிச் சோதனை பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தவறு நடந்த இடம் அனைத்தும் தேடப்பட வேண்டும் , கண்டுபிடிக்கபட வேண்டும். ஒட்டுமொத்த தமிழகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட பணம்தான் இது.வருமானவரிச் சோதனை படலம்முடிவல்ல.. தொடக்கம்தான். 
இச் சோதனை நன்மையை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது.தமிழகத்தில் கழகங்கள் இல்லாத சூழல்.. இவை இல்லாத ஆட்சிதான் தேவை.ஒரு ஆளுநருக்கு மாநிலத்தின் அனைத்து செயல்பாடுகளையும் கண்காணிக்க முழு அதிகாரம் உண்டு. அவர் எந்த விதிமீறலையும் செய்யவில்லை. மக்களைஏமாற்றி சதி செய்தவர்களுக்கு  விதிக்கப்பட்ட விதி இது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com