2 ஆயிரம் ரூபாய் நோட்டு ஊழலுக்கான உடற்பயிற்சியை ஊக்கப்படுத்தியது: அமெரிக்க பொருளாதார வல்லுனர் ரிச்சர்ட் கருத்து

உயர்பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்தியது தவறானது என அமெரிக்க பொருளாதார வல்லுனரும்
2 ஆயிரம் ரூபாய் நோட்டு ஊழலுக்கான உடற்பயிற்சியை ஊக்கப்படுத்தியது: அமெரிக்க பொருளாதார வல்லுனர் ரிச்சர்ட் கருத்து

புதுதில்லி: உயர்பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்தியது தவறானது என அமெரிக்க பொருளாதார வல்லுனரும் நோபல் பரிசு பெற்றவருமான ரிச்சர்ட் தாலர் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் சிக்காக்கோ பல்கலைக்கழக மாணவரான சுவராஜ் குமார், பொருளாதாரவியல் நிபுணரும், நோபல் பரிசு பெற்றவருமான ரிச்சர்ட் தாலரிடம், இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட உயர்பணமதிப்பிழப்பு குறித்து கருத்து கோரினார். 

அதற்கு மின்னஞ்சலில் ரிச்சர்ட் தாலர் அளித்த பதில், ரொக்கமற்ற பணப்பரிமாற்றம், கறுப்புப் பண ஒழிப்புக்காக பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டது சிறந்த திட்டம். ஆனால், அதை அமல்படுத்திய விதத்தில் ஆழமான குறைபாடு உள்ளதாகவும் இந்தியாவை குறைந்த ரொக்க பணபரிவர்த்தனை உடைய சமுதாயமாக மாற்றுவதை இலக்காகக் கொண்டதாவும் இருக்கலாம் என அவர் கருத்து கூறியுள்ளார். 

மேலும் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்துவிட்டு, அதற்கு மாறாக அதைவிட உயர்ந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டது குழப்பமான நடவடிக்கை எனவும் அது ஊழலுக்கான முழு உடற்பயிற்சியையும் ஊக்கப்படுத்தியது என ரிச்சர்ட் தாலர் விமர்சித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com