இந்திரா காந்தியின் பிறந்தநாளை கொண்டாடாமல் இருப்பது அவமானம்: ப.சிதம்பரம் பேச்சு 

மறைந்த முன்னாள் பிரதமரான இந்திரா காந்தியின் 100-வது பிறந்தநாளை இந்தியா கொண்டாடாமல் இருப்பது அவமானம் என முன்னாள்
இந்திரா காந்தியின் பிறந்தநாளை கொண்டாடாமல் இருப்பது அவமானம்: ப.சிதம்பரம் பேச்சு 

மும்பை: மறைந்த முன்னாள் பிரதமரான இந்திரா காந்தியின் 100-வது பிறந்தநாளை இந்தியா கொண்டாடாமல் இருப்பது அவமானம் என முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார். 

மும்பையில் டாடா இலக்கிய நிகழ்ச்சியில், ‘இந்திராவின் நூற்றாண்டு விழாவில் அவரை நினைவு கூர்வோம்’ என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடத்தப்பட்டது. அதில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டார். 

அப்போது பேசுகையில், மறைந்த முன்னாள் பிரதமர் மற்றும் விடுதலைக்காக போராடிய ஜவஹர்லால் நேருவின் மகளான மறைந்த முன்னாள் பிரதமரான இந்திரா காந்தியின் 100-வது பிறந்தநாளை இந்தியா கொண்டாடாமல் இருப்பது அவமானம் என கூறினார். 

இந்திரா காந்தி ஜனவரி 1966 மற்றும் அக்டோபர் 1984 இடையே இந்தியாவின் மூன்றாவது பிரதமராக இருந்தார். அவர் 1977 மற்றும் 1980-க்கும் இடையில் இரண்டு ஆண்டுகள் மற்றும் ஒன்பது மாத கால இடைவெளியில் அதிகாரமிக்கவராக இருந்துள்ளார். 

இந்திரா காந்தி மற்ற பிரதமர்களை போல் இல்லாமல், அவர் பிரதமராக இருந்த சூழல் மற்றும் அவர் தனது சொந்த வழியில் எதிர்கொண்ட சவால்களை வைத்து மதிப்பிட வேண்டியவர். அவர் எதிர்கொண்ட சவால்களில் சில துறைகளில் வெற்றி பெற்றுள்ளார், சில துறைகளில் தோல்வியடைந்துள்ளார். அவர் ஜூன் 1975-ல் அவசர நிலை பிரகடனம் செய்து தவறு செய்துள்ளார். அதை அவரே ஒப்புகொண்டு மீண்டும் இதேபோல் தவறு நடக்காது என உறுதியளித்தார். 

நாட்டின் ஒரே பெண் பிரதமாரான இந்திரா காந்தியின் 100-வது பிறந்தநாளை இந்தியா கொண்டாடாமல் இருப்பது அவமானத்திற்குரியது. மத்திய அரசு அவரது பிறந்தநாளை கொண்டாடவில்லை. எந்த மாநில அரசு கொண்டாடி வருகிறது என்பதும் தெரியவில்லை.  

"ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்பு சந்தையில் நுழைந்த 1.2 கோடி மக்களுக்கு மோடி அரசில் வேலை வழங்கப்பட்டதா என கேள்வி எழுப்பினால் மோடி தோல்வியே அடைவார். வேலைவைய்ப்பு விவகாரத்தில் இதுவரை அவர் தோல்வி அடைந்துள்ளார் என்று சிதம்பரம் கூறினார்.

காங்கிரஸ் கட்சி அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகிறது. இருப்பினும் ரஷ்ய மக்கள், ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டு விழாவை மறந்தது போல, நமது மக்களும் இந்திரா காந்தியில் பிறந்தநாளை மறந்துவிட்டனர் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com