அணிகள் இணைந்தும் மனங்கள் இணையவில்லை: மைத்ரேயன் எம்.பி. அதிருப்தி

அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்து 3 மாதங்கள் நிறைவுற்று 4வது மாதம் தொடங்கியும் மனங்கள் இணையவில்லை என
அணிகள் இணைந்தும் மனங்கள் இணையவில்லை: மைத்ரேயன் எம்.பி. அதிருப்தி

சென்னை: அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்து 3 மாதங்கள் நிறைவுற்று 4வது மாதம் தொடங்கியும் மனங்கள் இணையவில்லை என அக்கட்சியின் மாநிலங்களை உறுப்பினர் மைத்ரேயன் தனது முகநூல் பக்கத்தில் ஆதங்கத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தி உள்ளார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக முதல் அணி என்றும் பின்னர் 3 அணிகளாக உடைந்த போது ஓ.பன்னீர்செல்வம் அதாரவாளராக மைத்ரேயன் இருந்து வந்தார்.

இந்நிலையில் முதல்வர் பழனிசாமி அணியும், பன்னீர்செல்வம் அணியும் தில்லியின் ஆசியுடன் ஒரு அணியாக இணைந்தது. இந்த அணிகள் இணைப்பில் தனக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்பது மைத்ரேயனின் கனவாக இருந்ததாக தகவல் வெளியானது. ஆனால் அதிமுக அணிகள் இணைப்புடோ மட்டுமே தங்களின் செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டது. 

இதனால் மத்தியில் அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில் ஓபிஎஸ் அணியியினர் இருந்து வருகின்றனர். இதனிடையே அதிமுக அணிகள் இணைந்த பின்னரும் இருதரப்பும் இணக்கமாக இல்லை என்றே கூறப்பட்டது. முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, மைத்ரேயன் போன்றவர்கள் அதிருப்தியுடன்  இருப்பதாகவே தகவல் வெளியானது . 

இதை உறுதிப்படுத்தும் விதமாக அதிமுக இணைப்பு தொடர்பான அதிருப்தியை அவ்வப்போது தனது முகநூல் பக்கத்தில் மைத்ரேயன் பதிவிட்டு வந்தார். 

இந்நிலையில், இன்று தமது முகநூல் பக்கத்தில், ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணி இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் மட்டுமே உருண்டோடுகின்றன. மனங்கள்? இணையவில்லை என தனது ஆதங்கத்துடன் கூடிய ஒரு பதிவிட்டுள்ளார் மைத்ரேயன்.

கடந்த வாரம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லத்தில் நடத்த வருமானவரித் துறையினர் நடத்திய சோதனைக்கு கண்டனம் தெரிவித்தவர் மைத்ரேயன் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com