பாவம் செய்தவர்களுக்கு புற்றுநோய் வரும்: சுகாதாரத்துறை அமைச்சர் சர்ச்சைப் பேச்சு

பாவம் செய்தவர்களுக்கு தான் புற்றுநோய் வரும் என்று அசாம் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி
பாவம் செய்தவர்களுக்கு புற்றுநோய் வரும்: சுகாதாரத்துறை அமைச்சர் சர்ச்சைப் பேச்சு

குவாஹாட்டி: பாவம் செய்தவர்களுக்கு தான் புற்றுநோய் வரும் என்று அசாம் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

குவாஹாட்டியில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பள்ளி ஆசிரியர்களுடன் அசாம் மாநில பாஜக தலைவரும் அமைச்சருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா, ​​"நல்ல மற்றும் கெட்ட கர்மா பற்றி பேசுகையில், "ஹிந்துக்கள் கர்மா மீது நம்பிக்கை உள்ளவர்கள் எனவே மனிதன் தற்போது அனுபவித்து வரும் துன்பங்களுக்கும் முன் ஜென்மத்தில் செய்த கர்ம வினைக்கும் தொடர்பு உள்ளது" என்றும் நாம் எப்போது பாவம் செய்கிறோமோ, அப்போதே கடவுள் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறார் என்று கூறினார்.

நாம் இளைஞர்களுக்கு புற்றுநோய் வருவதையும், பார்த்திருக்கிறோம். அவர்கள் விபத்துக்களில் சிக்குவதையும் பார்த்திருக்கிறோம். நீங்கள் அவர்களிடம் கடந்த காலத்தை பார்த்தால் அவர் செய்த பாவத்திற்கான தண்டனையாகவே அது அமைந்திருக்கும் வேறு ஒன்றும் இல்லை. நாம் செய்த பாவங்களுக்கான தண்டனையை நாம் அனுபவித்தே ஆக வேண்டும் என கூறினார். 

"வாழ்நாளில் அல்லது நமது முந்தைய வாழ்க்கையில், ஒருவேளை தந்தை அல்லது தாய், அந்த இளைஞன் எதுவும் செய்யவில்லை என்றாலும் அவரது தந்தை ஏதோ தவறு செய்திருந்தார் என்றாலும் யாரும் தெய்வீக நீதியிலிருந்து தப்பிக்க முடியாது என்றார்."

மேலும் வாழும் காலத்திலோ, முற்பிறவியிலோ செய்த பாவத்தின் காரணமாக தான் புற்றுநோய், திடீர் விபத்துகளால் மரணம் ஆகியவை நிகழ்வதாக தெரிவித்த ஹிமந்தா பிஸ்வா, இது புனித நீதி என்றும் கூறினார்.  

செய்த பாவங்களால் ஏற்படும் வினையை யாரும் தடுக்க முடியாது. நீதி என்பது எங்கும் நிறைந்திருக்கிறது. முன் ஜென்ம பாவங்கள் நம்மை பாதிக்கும், அதில் இருந்து யாருமே தப்ப முடியாது என்பதை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள் என்றார்.

தனியார் பள்ளியில் குறைந்த சம்பளத்திற்கு கடினமாக உழைக்கும் ஆசிரியர்கள் ஏன் அதிக சம்பளம் பெற்றும் அரசுப் பள்ளியில் தங்களது உழைப்பை காட்டுவதில்லை. என்ற கேள்வி எழுப்பியவர், ஆசிரியர்கள் "கடுமையாக உழைத்து நேர்மையாக இருக்க வேண்டும்" என்று அறிவுரை கூறினார். 

சுகாதாரத்துறை அமைச்சர் இவ்வாறு பேசி இருப்பது, அரசியல் வட்டாரத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதுடன் புற்றுநோய் தாக்கத்துக்கு உள்ளானவர்களின் மனதை புண்படுத்தி இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

அசாம் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தேபாபரதா சயிகியா அமைச்சரின் கருத்துக்கள் உணர்ச்சியற்றவை என்று கூறினார். "அவரது அறிக்கை புற்றுநோய் நோயாளிகளை காயப்படுத்தியுள்ளது, இது அவரது மனோபாவத்தை பிரதிபலிக்கிறது" என்று சயிகியா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் உள்ள அனைத்து புற்றுநோய்களையும் மூடிமறைக்க முயற்சிப்பதாக அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவர் அமுனுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார். 

2001 முதல் 2015 வரை காங்கிரஸ் கட்சியில் அசாம் ஜலுக்பாரி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராக இருந்து வந்த ஹிமாந்தா, 2016-இல் பாஜகவில் சேர்ந்தார். பாஜகவில் அவருக்கு நிதித்துறை, கல்வித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட முக்கியத் துறைகளின் அமைச்சராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com