பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ 2 குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி விகிதத்தை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளது. 
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ 2 குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி விகிதத்தை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளது. 

பெட்டோல் டீசல் விலை தினமும் உயர்ந்து வருகிறது. தினசரி விலையேற்றம் தொடங்கிய நாள்  முதல் இன்று வரை தில்லியில் 8 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.  எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை 5 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.73.48 காசுகளாகவும், டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.62.30 காசுகளாகவும் உள்ளன.

தினசரி விலை உயர்வுக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி விகிதத்தை லிட்டருக்கு ரூ.2 குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த வரிக்குறைப்பு நாளை அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டின் வளர்ச்சிக்காக பெட்ரோல் டீசல் விலை மீதான கலால் வரியை குறைக்க முடியாது  என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடந்த மாதம் கூறியிருந்தார்.

எனினும் மக்களின் நெக்கடியை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ 2 குறைக்கப்படுவதாக இன்று மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது. இந்த விலைக்குறைப்பு காரணமாக மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 26 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com