’பராசக்தி படம் இப்போது வெளியாகியிருந்தால்?’: ப.சிதம்பரம் கேள்வி

மெர்சல் திரைப்பட வசனங்களுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி
’பராசக்தி படம் இப்போது வெளியாகியிருந்தால்?’: ப.சிதம்பரம் கேள்வி

சென்னை: மெர்சல் திரைப்பட வசனங்களுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் பாஜகவினர் கண்டனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

நடிகர் விஜய்யின் மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி வரி மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்து தவறான தகவல்கள் அடங்கிய காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக பாஜகவினர் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, சர்ச்சைக்குரிய அந்த காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பல்வேறு தடைகளை தாண்டி தீபாவளி அன்று திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிவரும் மெர்சல் திரைப்படத்தில், மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறித்து நடிகர் விஜய் பேசிய வசனத்தை வைத்து பாஜகவினர் மீண்டும் புதிய சர்ச்சையை  உருவாக்கி வருகின்றனர்.

28 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்கும் இந்திய அரசாங்கத்தால் ஏன் மருத்துவத்தை இலவசமாக தரமுடியவில்லை என படத்தில் நடிகர் விஜய் பேசிய வசனம் ஆளும் பாஜகவினர் மத்தியில் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அதில், மெர்சல் திரைப்படத்தில் உள்ள வசனங்களை நீக்குமாறு பாஜக கோருகிறது. பராசக்தி படம் தற்போது வெளியாகியிருந்தால் அதன் பின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.  

அரசின் கொள்கைகளை பாராட்டியும், புகழ்ந்து ஆவண படங்கள்தான் எடுக்க முடியும் என்ற சட்டம் வரப்போகிறது என்பதை இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் கடுமையாக விமர்சனங்களை பதிவிட்டுள்ளார் ப.சிதம்பரம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com